சென்னை,ஏப்.16- தமிழ்நாட்டுக்கு 6.25 லட்சம் தவணை கரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கு மாறு பொது சுகாதாரத் துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் தடுப்பூசி முகாம் களை நடத்தும் நோக்கில் இந்த வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் வீணா தவணுக்கு, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அனுப்பி யுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 2021, ஜன. 16 முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 38 சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டு 5.51 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட் டுள்ளன. 18 வயதைக் கடந்த 97.89 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 92.47 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை தவணையை (பூஸ்டர்) பொருத்தவரை 17.04 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை 11.93 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்ட் தடுப்பூசி 9.29 கோடி, கோவேக்ஸின் 2.18 கோடி, கோர்பிவேக்ஸ் தடுப்பூசி 45.20 லட்சம் தவ ணைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் தற்போது எந்த வகை கரோனா தடுப்பூசியும் கையிருப்பில் இல்லை. அதேவேளையில், தமிழ்நாட்டில் இன்னமும் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் தவணையும், 86 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டாம் தவணையும், 4.42 கோடி பேர் முன்னெச் சரிக்கை தவணையும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.
அதைக் கருத்தில் கொண்டு, காலாவதி காலம் அதிகம் உள்ள 5 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளையும், 50,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளையும், 75,000 கோர் பிவேக்ஸ் தடுப்பூசிகளையும் விரைந்து வழங்க வேண் டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment