சென்னை, ஏப். 20- தமிழ் நாடு சட்டமன்றத்தில் நேற்று (19.4.2023) ஆளுநர் செலவினங்கள் தொடர்பாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகை யில், ``ஆளுநர் செலவி னங்கள் குறித்து ஏற்கெ னவே அய்ந்து உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆளுநர்கள் கூட் டம் நடைப்பெற்றது. அதன் விளைவாக ஒரு குழு நியமிக்கப்பட்டு ஆளுநர் செயலகத்தின் செயல்பாடுகளை சிறப்புற நடத்த முடிவெ டுக்கப்பட்டது. ஆளுநர், மாநில அரசிடம் கேட்கப்படும் நிதி தரப்பட வேண்டும் என்பது தொடர்பான கடிதம் நிதித்துறை செயலருக்கு அனுப்பப்பட்டது.
அப்போது அவர் கோப்பு ஒன்றை உருவாக் குகிறார். அந்தக் கோப்பு கடந்த ஆட்சியில், அமைச்சர்களின் ஒப்பு தல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் எந்த அமைச்சர்களுக்கும் பங்கு இல்லை என்பதுதான் உண்மை. இதில் அரசின் கொள்கை முடிவு என எதையும் கூறி விட முடியாது. 2021ஆம் ஆண்டு புதிய ஆளு நர் ஆர்.என்.ரவி பொறுப் பேற்ற பின், 17 கோப்புகளுக்கு கூடுதல் நிதி தமிழ்நாடு அரசு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் கோப்பு ’பென்ஸ்’ உட்பட அய்ந்து வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.2 கோடி 10 லட்சம், சுதந்திர தின விழாவை நடத்துவதற்கு ரூ.25 லட்சம், சுற்றுப் பய ணத்துக்கு ரூ.15 லட்சம், அமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்கு ரூ.10 லட்சம், கிறிஸ்துமஸ் விழாவிற்கு ரூ.25 லட்சம், குடியரசு தின விழாவுக்கு ரூ.25 லட்சம், மேசை நாற்கா லிகள் வாங்குவதற்கு... இப்படியாக அவர்கள் கேட்கப்பட்ட அனைத்து நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் அரசின் மீது ஆளுநர் குறை கூறும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்ப டையில் எந்த மாநிலத் திலும் ஆளுநருக்கான செலவின நிதி அதிகரிக் கப்படவில்லை.
பெரும்பாலான மாநிலங்களில் லட்சக்க ணக்கில் மட்டுமே செல வின தொகைகள் இருந்து வருகிறது. ஆனால், தமிழ் நாட்டில் அப்படியில்லை.
அது அவர்களின் உரிமையாக இருக்கலாம். ஆனால், நமது கடமை நிதித் துறை விதியை(Finance Code) பின்பற்றுவது. அதன் அடிப்படை யில் மூன்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1. அதில் எந்த துறை யாக இருந்தாலும், செலவு செய்யப்படாத தொகை திரும்ப பெறப் பட மாட்டாது. எனவே அய்ந்து கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆளுநர் செலவினங்களை இந்த ஆண்டு மூன்று கோடியாக குறைத்து இருக்கிறோம்.
காரணம், கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதியை அவர்கள் செலவு செய்யா மல் இருக்கின்றனர்.
2. ஆளுநர் நிதிகள் கணக்கில் வராமல் இருப்பதை, ஒன்றிய அரசு தணிக்கை செய்வதற்கு முன்பாக, மாநில அரசு அதை தணிக்கை செய்வதற்கான திட்டம் முன்னெடுக்கப் பட்டுள்ளது.
3.நிதி மேலாண்மையை விதிமுறைக்கு உட்பட்டு எப்படி செயல் பட வேண்டும் என்பதற் கான கோப்புகள் தயாரிக் கப்பட்டு விரைவில் முதலமைச்சர் கையெழுத்திடுவார். அது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மன்னராட்சி உள்ள நாடுகளில் மன்னருக்கு ஒதுக்கப்படும் நிதியை அவர் எப்படி வேண்டுமானாலும் செலவிடலாம். ஆனால், நம் நாடு ஜனநா யகத்துக்கு உட்பட்டு மக்களாட்சி கொண்ட நாடு.
ஜனநாயக நாட்டில் விதிமுறை என்ன சொல் கிறதோ அதற்கு உட் பட்டு தான் செலவுகள் செய்யப்பட வேண்டும். இதை உறுதி செய்வது நிதித் துறையின் கடமை என்பதால் நாங்கள் எங் கள் கடமையை தெளி வாக செய்கிறோம்" என்றார்.
No comments:
Post a Comment