சென்னை, ஏப்.28 தொழிலாளர் உதவி ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தொழிலாளர் துறையில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 தொழிலாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நல வாரி யங்களில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களான கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனம் ஆகியவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாரியங்களில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
தொழிலாளர்கள் தங்களது பதிவு விண்ணப்பங்களை www.tnuwwb.tn.gov.என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தியாகராயர் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலை பேசி 044-28342776 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment