காரைக்குடி விரைவில் மாநகராட்சியாகிறது ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைய வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 20, 2023

காரைக்குடி விரைவில் மாநகராட்சியாகிறது ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைய வாய்ப்பு

காரைக்குடி,ஏப்.20- காரைக்குடி சிறப்புநிலை நகராட்சி விரைவில் மாநகராட்சியாகிறது. இந்நக ராட்சி பகுதியுடன் ஒரு பேரூராட்சி, 5 ஊராட்சிகள் இணைக்கப் பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928 ஆம் ஆண்டு காரைக்குடி நகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது. சிவ கங்கை மாவட்டமாக பிரிந்த பின்பு 1988ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட் சியாகவும், 2013ஆம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த் தப்பட்டது.

தற்போது காரைக்குடி நகராட் சியில் 36 வார்டுகள் உள்ளன. இந் நகராட்சி 13.75 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ.50 கோடிக்கு மேல் உள் ளது. அரசு போக்குவரத்துக் கழகம், பிஎஸ்என்எல், ஆவின் போன்ற வற்றின் மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன.

ஏற்கெனவே சிக்ரி, அழகப்பா பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரி உள்ள நிலையில், கடந்த ஆண்டு வேளாண்மைக் கல்லூரி, சட்டக் கல்லூரிகள் தொடங் கப்பட்டன. தற்போது டைடல் பார்க், ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடிக்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். காரைக் குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்தக் கோரி 2015ஆம் ஆண்டு மே மாதம் அப் போதைய தலைவர் கற்பகம் தலைமையிலான நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் பின்பு நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

இந்நிலையில் அண்மையில் சட்டப்பேரவையில் காரைக்குடி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். அதன் படி விரைவில் காரைக்குடி மாநக ராட்சியாக அறிவிக்கப்பட உள் ளது.

புதிய பகுதிகள்: காரைக்குடி நக ராட்சியுடன் கோட்டையூர் பேரூ ராட்சி மற்றும் சங்கராபுரம், கோவி லூர், இலுப்பக்குடி, அரியக் குடி, அம ராவதி-புதூர் ஆகிய 5 ஊராட்சிகளை இணைக்க வேண்டும் என நகராட்சி தலைவர் முத் துத்துரை தலைமையில் தீர்மானம் நிறை வேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதி களை இணைத்தால் காரைக்குடியின் மக்கள்தொகை மூன்று லட்சமாக லாம் என்று கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment