சென்னை, ஏப். 13- தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலா ளர் பி.உமாமகேஸ்வரி நேற்று (12.4.2023) வெளியிட்ட அறிவிப்பில் கூறி யுள்ளதாவது:
தமிழ்நாடு அரசின் சிறை மற்றும் சீர்திருத் தப்பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்) பதவியில் 54 காலியிடங் களும், உதவி ஜெயிலர் (பெண்) பதவியில் 5 காலியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி பட்டப் படிப்பு தேர்ச்சி ஆகும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது.
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தகுதியுடைய நபர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை (ஷ்ஷ்ஷ்.tஸீஜீsநீ.ரீஷீஸ்.வீஸீ) பயன்படுத்தி மே மாதம் 11ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 1ஆம் தேதி காலையும் பிற் பகலும் நடைபெறும். தேர்வுமுறை, தேர்வுக் கான பாடத்திட்டம், உடற்தகுதி உள்ளிட்ட விவரங்களை தேர்வா ணையத்தின் இணைய தளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியி டப்பட்டு சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் கலந் தாய்வு செப்டம்பர் மாதத்தில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சிறைத் துறையில் நேரடியாக உதவி ஜெயி லர் பணியில் சேரு வோர் டிஅய்ஜி வரை படிப்படி யாக பதவி உயர்வு பெற லாம்என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment