தமிழ்நாட்டில் 509 பேருக்கு கரோனா பாதிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 24, 2023

தமிழ்நாட்டில் 509 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை, ஏப்.24- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரு கிறது. இதன்படி தமிழ்நாட்டில் இன்று (24.4.2023) ஒருநாள் கரோனா பாதிப்பு 509 ஆக பதிவாகி உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 509 பேர் கரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் ஆண்கள் 250 பேர், பெண்கள் 259 பேர் அடங் குவர். 

வெளிநாட்டு பயணிகள் 2 பேர் உள்பட மொத்தம் 36 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 102 பேருக்கும், கோவை யில் 68 பேருக்கும், திருப்பூரில் 36 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 

கரோனா பாதிப்பில் இருந்து இன்று 513 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 671 ஆக உள்ளது. இன்று தமிழ்நாட்டில் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment