சென்னை,ஏப்.29- சென்னை பெருநகரின் 3ஆவது பெருந் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பதற் கான மக்கள் கருத்துக் கேட்பில் இது வரை 47,095 பேர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை பெருநகரின் முதல்மாஸ்டர் பிளான் கடந்த 1976ஆம் ஆண்டும், 2ஆவது மாஸ்டர் பிளான் கடந்த 2008ஆம் ஆண்டும் தயாரிக்கப்பட்டன. அதன் அடிப் படை யில்தான் தற்போது வரை அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அண்மையில், சென்னை பெருநகரின் எல்லையானது விரிவுபடுத்தப்பட்டு 1,189 சதுர கிமீ பரப்பு சேர்க்கப்பட்டது. இந்நிலையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கான 3ஆவது மாஸ்டர் பிளான் அதாவது 2046இல் சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப் படுகிறது. இந்த மாஸ்டர் பிளான் வரும் 2026ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
இதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்க ஆலோசகர் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னையின் 29 மண் டலங்களில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தி கருத்துகள், விருப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆவண விழிப்புணர்வு கையேடு
குறிப்பாக சென்னையில் மக்கள் அதிகம்கூடும் இடங்களான மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், ரயில், பேருந்து, மெட்ரோ ரயில் நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறு வனங்களில் நேரடியாகவும் வலைதளங்கள் மூலமாக வும் சிஎம்டிஏ கருத்துக் கேட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடத்த ஏட்.10ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர்" சிலை அரு கில் சென்னை பெருநகர 3ஆவது பெருந்திட்ட தொலை நோக்கு ஆவண விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொதுமக்களிடம் வழங்கினார்.
தொடர்ச்சியாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சென்னை சென்ட்ரல் மெட்ரோ, எழும்பூர், ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கருத்து தெரிவிப்ப தற்கான க்யூஆர் கோடு கொண்ட பதாகை வைக்கப் பட்டுள்ளது.
இதை தங்கள் கைபேசியில் பொதுமக்கள் ஸ்கேன் செய்து, தங்கள் விருப்பத்தை உள்ளீடு செய்யலாம். இது தவிர, இணையதளம் வாயிலாகவும் கருத்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்துக் கேட்பு தொடர்ந்து நடைபெறும்
அந்த வகையில் கடந்த 27.4.2023 அன்று வரை, நீண்ட வினாக்கள், குறுகிய வினாக்கள் அடிப்படையில் இரு வகையாக நடத்தப்பட்டுள்ள இந்த கருத்துக் கேட்பில், ஆன்லைன், நேரடியான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்கள் ஆலோசனை என்ற அடிப்படையில் 47,905 பேர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இனியும் சிஎம்டிஏ கருத்துக் கேட்பு தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கன், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் தங்களின் தேவைகள் அடிப்படையில் சென்னை பெருநகரம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான கருத்துகளை தெரிவிக்கலாம்.
குரூப் ஒன் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை, ஏப். 29- தமிழ்நாடு அரசு சார்ந்த பணியிடங் களை நிரப்புவதற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் (TNPSC) தேர்வு நடத்தி ஆட்சேர்ப்பு நடத்தி வருகிறது. அரசுப் பணிகளைப் பொறுத்து 8 வகைகளில் குரூப் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் குரூப் 1 தேர்வில் பல்வேறு அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பஞ்சாயத்து உதவி இயக்குநர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், துணை ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், உதவி வணிகவரி ஆணையர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலர் ஆகிய பணியிடங்கள் குரூப் 1 தேர்வில் அடங்கும். அதேபோல் குரூப் 1 பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின் றனர். இந்தநிலையில் 2022ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப் பட்டது.
அதன்படி துணை ஆட்சியர் பதவிக்கான 18 காலி இடங்கள், காவல் துணை கண்காணிப்பாளர் பதவிக்கான 26 காலி இடங்கள், கூட்டுறவு சங்கதுணை பதிவாளர் பதவிக்கான 13 காலி இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கான 25 காலி இடங்கள், ஊரகமேம்பாடு உதவி இயக்குநர் 7 பணியிடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3 பணி இடங்கள் என குரூப்-1 தேர்வில் காலி யாக உள்ள 92 பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இளங் கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற துறைகளை பட்டம் பெற்றவர்களுக்கு சில பதவி களில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டி ருந்தது. இந்தசூழலில் கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, குரூப் 1 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அரசுத் துறைகளில் இருந்த 92 காலியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்தநிலையில் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது. 2 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், 2,162 பேர் தேர்ச்சி பெற்றுள் ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு தயாராகலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றுள்ள 2,162 பேருக்கும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை முதன்மை தேர்வு நடத்தப்படும் எனவும், மே 8ம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் தேவை யான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment