தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது

தஞ்சாவூர், ஏப். 27- திருநாகேஸ்வரம் மணல்மேட்டு தெருவை சேர்ந்த கணேசன் மகன் ஹரி (வயது30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞரணி தலைவர். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் மணிகண்டன் (32).

இவர்கள் உள்பட 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவில் அலுவலகத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கோவில் உதவி ஆணையர் உமாதேவி திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த வழக்கில் நேற்று திருநீலக்குடி காவல் துறையினர் ஹரி மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சூடானிலிருந்து மீட்கப்பட்ட 9 பேர் தமிழ்நாடு வந்தடைந்தனர்

No comments:

Post a Comment