கார்தோம் ஏப். 25- வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையான ஆர்எஸ்எப் பிரிவும் (ரேபிட் சப்போர்ட் போர்ஸ்) கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன. இரு குழுவிலும் அரசு சார்ந்த ஆயுதங்கள் இருப்பதால் ஏவுகணை வீச்சுக் கூட அரங்கேறி வருகிறது.
இந்த மோதலில் இதுவரை பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக வும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும், இறந்த வர்களில் 9 பேர் குழந்தைகளும் அடங்கு வர் எனவும் உலக சுகாதார அமைப்பு (கீபிளி) அறிவித்துள்ளது. கணிக்க முடியாத தாக்குதலால் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் உணவு, தண்ணீர், மருந்துகள், மின்சாரம் என அடிப்படை வசதிகள் இல்லாமல் 70 லட்சம் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. இதில் 4,000 இந்தியர்களும் சூடானில் சிக்கி யுள்ளனர். இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை சூடான் தூதரக அதிகாரிகளுடன் பேசி தீவிர முயற்சி மேற் கொண்டு வரும் நிலையில், சூடானில் உள்ள பிரான்சு நாட்டின் தூத ரக முயற்சியால்இந்தியர்கள் உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தூதர கம் தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment