தமிழ்நாட்டில் இதுவரை 260 கோடி மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 19, 2023

தமிழ்நாட்டில் இதுவரை 260 கோடி மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் பயணம்

சென்னை,ஏப்.19- தமிழ்நாட்டில் மகளிர் கட்டண மில்லா பேருந்துகளில் இதுவரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற உடன் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், 'நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய் யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்தத் திட்டம், மே 8ஆம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு கொண்ட பேருந்துகளிலுரும், கிராமப்புறங்களில் நகரப் பேருந்து களிலும் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணமில்லா பயணம் திட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 30ஆம் தேதி வரை 260.59 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment