சூரத் ஏப்ரல் 14 ராகுல் காந் திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு வழக் கில், வரும் 20-ஆம் தேதி உத்தரவு வழங்கப்படுகிறது.
2019-இல் கருநாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர் களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?" என்று விமர் சித்தார். இது தொடர்பாக குஜ ராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந் தார். இதில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராகுலின் மக்க ளவை உறுப்பினர் பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிறைத் தண் டனைக்கு தடை கோரி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை, சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.பி.மொகேரா முன் னிலையில் நடை பெற்றது.
ராகுல் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.எஸ் சீமா, ‘‘இந்த வழக்கு எலெக்ட்ரானிக் ஆதாரங்கள் அடிப்படையிலா னது. ராகுல் பேசியதை செய் தியில் பார்த்து, 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒருவர் அவதூறு வழக் குத் தொடர்ந்துள்ளார். இதில் அதிகபட்ச தண்டனை தேவையில்லை’’ என்றார்.
பர்னேஷ் மோடியின் வழக் குரைஞர் ஹர்ஷித் டோலியா வாதிடும்போது,
‘‘தனது கருத் துகள் மூலம் மோடி என்ற துணைப் பெயரை வைத்திருப்பவர்களை அவ மானப்படுத்த ராகுல் முயன் றுள்ளார். காங் கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் அவ்வாறு பேசியது, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது. அவர் தனது உரையில், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி மட்டும் பேசாமல், மோடி என்று துணைப் பெயர் உடைய வர்கள் அனைவரையும் திரு டர்கள் எனக் கூறியுள்ளார். மன்னிப்பு கேட்கவும் ராகுல் மறுத்துவிட்டார். எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட தண் டனைக்கு தடை விதிக்கக் கூடாது’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி ஆர்.பி. மொகேரா, மேல் முறையீட்டு மனு மீது வரும் 20ஆ-ம் தேதி உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment