புதுடில்லி, ஏப்.16- 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பக்கம் நிற்கப் போவதாக மேனாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள் ளார். தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய தேவகவுடா, “வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நான் இடது சாரி கட்சிகள் பக்கம் நிற்கப்போகிறேன்" என்று தெரிவித்தார்.
கருநாடகா மாநிலத் தில் அடுத்த மாதம் சட் டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலை யில், மதச்சார்பற்ற ஜனதாதளம் தனது இரண்டாவது வேட் பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, ஹாசன் தொகுதியில் தேவகவுடாவின் மரு மகள் பவானி ரேவண் ணாவுக்கு பதிலாக ஹெச்பி ஸ்வரூப் நிறுத்தப் படுவார் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தும்படி பிதரமருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சமீபத்தில் பிரதமர் மோடிக்கு நான் எழுதிய கடிதத்தில், பெண்கள் இடஒதுக்கீடு மசோ தாவை மீண்டும் அறி முகம் செய்யவதை பரிசீ லிக்கும்படி வேண்டு கோள் விடுத்துள்ளேன். விரைவில் புதிய நாடா ளுமன்ற கட்டடத்திற்கு நாம் போகும்போது அதுவே முதல் சிறந்த விடயமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் அக்கடிதத்தையும் இணைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில், "இந்திய தேர்தல் ஆணையம், சமீபத்தில் கருநாடகா சட்டப் பேர வைக்கான தேர்தலை அறிவித்தபோது வாக்களிக்கத் தகுதியான பெண் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் அறிவித்தது.
மொத்த வாக்காளர்களில் அவர்கள் 50 சதவீ தம் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்தி யாவின் மற்ற மாநிலங் களிலும் இந்த புள்ளி விபரங்களில் பெரிய மாற் றம் இருக்காது. இது சட் டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை திரும்ப அறிமுகம் செய் வது குறித்த யோசிக்க வைக்கிறது. எனவே, வரும் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக பெண்களுக் கான இடஒதுக்கீடு மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்று நான் உங்களை வலியுறுத்து கிறேன். கடந்த 1996 மற் றும் 2008ஆம் ஆண்டு மசோதாக்களில் தேவை யான திருத்தங்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். பாலின சமத்துவத்துக் கான இந்த நகர்வு, சமூக நீதிக் கொள்கைக்கான முக்கிய வெற்றியாக இருக்கும். சட்டப் பேரவை மற்றும் நாடாளு மன்றத்தில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு என்ற இந்த சிந்தனை இந்தக் காலத்தில் நிறை வேற்றப்பட வேண்டும். புதிய மற்றும் நவீனமான நாடாளுமன்றக் கட்டடத்திற்கு நாம் மாறும்போது, பெண்கள் இடஒதுக்கீடு மசோ தாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவது ஒரு சிறந்த நினைவாக இருக் கும். நமது தாய்மார்களும் சகோதரிகளும் இதைப் பெறுவதற்கு தகுதியா னவர்களே" என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment