சாத்தூர்,ஏப்.16 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக் கோட்டையில் 2-ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட 200 அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.
வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப் டம்பர் மாத இறுதி வரை இப்பணிகள் நடைபெற்றன. அப்போது நுண் கற் காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெ டுக்கப்பட்டன.
அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம் மைகள், தக்களி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் மற்றும் பானை ஓடுகள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்டவை என அறிய முடிகிறது.
இந்நிலையில், 2-ஆம் கட்ட அகழாய்வுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன. இதையடுத்து, இப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2-ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த 6ஆம் தேதி தொடங்கப்பட்டன.கடந்த 10 நாட்களாக நடைபெற்ற 2-ஆம் கட்ட அகல ஆய்வு பணியில் இதுவரை சுமார் 200=க்கும் மேற்பட்ட பழங்காலத்தில் பயன்படுத் தப்பட்ட அரிய பொருட்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.இது குறித்து வெம்பக் கோட்டை அகழாய்வு பணி இயக்குநர் பொன் பாஸ்கர் கூறுகையில், "இந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் மேலும் பல அறிய பழங்கால பொருட்கள் கண் டெடுக்கப்பட்டு வருகின்றன. சுடு மண் ணால் செய்யப்பட்ட புகை பிடிப்பான், கல்லால் ஆன எடை கற்கள், செப்பு நாணயங்கள், கண்ணாடி மணிகள், சுடு மண் காதணி, இரும்பு பொருட்கள் போன்ற 200 பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன" என்று தெரி வித்தார்.
No comments:
Post a Comment