சென்னை, ஏப். 16- ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024 ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின்கீழ் ஒன்றிய ஆயுதக் காவல் படைகள் (சிஏபிஎஃப்) அமைப்பு செயல்படுகிறது. நாடு முழுவதிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர் பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சிஅய்எஸ் எஃப்), எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்), தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி), இந்தோ - திபெத் எல்லை காவல் படை (அய்டிபிபி), எல்லை காவல் படை (சஷஸ்த்ர சீமா பல் - எஸ்எஸ்பி) ஆகிய பாதுகாப்பு படைகளை உள்ள டக்கியதே இந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்புக்கான காவலர் பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பப்படுகின் றன. இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இத்தேர்வு நடத் தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎஃப்) 9,212 காவலர் பணியிடங்களை நிரப்புவதற் கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், தமிழ் நாட்டிற்கு 579 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நேரம், காவலர் பணிக்கான கணினி வழி தேர்வு ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத் தப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு தமிழ் நாட்டில் பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.இதையடுத்து, சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ் உட்பட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான (சிஏபி எஃப்) தேர்வுகள் ஹிந்தி, ஆங் கிலம் மட்டுமின்றி, கூடுதலாக தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றியஅரசு அறிவித் துள்ளது. இதுகுறித்துஉள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி யின் அறிவுறுத்தல்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கான (சிஏபிஎஃப்) காவலர் பணித் தேர்வை ஹிந்தி, ஆங்கிலத் துடன் கூடுதலாக 13 மாநில மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித் துள்ளது. உள்ளூர் இளைஞர் கள் சிஏபிஎஃப் படைகளில் அதிக அளவில் சேரவும்,மாநில மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
ஹிந்தி, ஆங்கிலம் தவிர, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி,மணிப்புரி, கொங்கணி ஆகிய 13 மாநில மொழிகளிலும் இனிமேல் வினாத்தாள் தயாரித்து வழங் கப்படும். இந்த முடிவு, லட் சக்கணக்கான இளைஞர்கள் அவர்களது தாய்மொழியில் தேர்வு எழுத வழிவகுப்பதுடன், அவர்களது தேர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பல்வேறு இந்திய மொழி களில் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, உள்துறை அமைச் சகம், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் ஆகியவை இப்போது வழக்கத்தில் இருக் கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூடுதலாக கையெழுத்திடும். மாநில மொழிகளில் தேர்வு என்பது வரும் 2024ஆ-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும். இளை ஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நாட்டுக்கு சேவை யாற்றவும், அதிக எண்ணிக்கை யில் பங்கேற்பதை ஊக்குவிக் கவும் அந்தந்த மாநில அரசுகள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி
ஒன்றிய அரசின் அறிவிப் புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதிய கடிதத்தின் பலனாக, அனைத்து மாநில மொழிகளிலும் சிஏபிஎஃப் தேர்வுகளை நடத்துவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கிறேன். அனைத்து ஒன்றிய அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவ தற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
சிஆர்பிஎஃப் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வலி யுறுத்தி திமுக இளைஞர், மாணவர் அணிகள் சார்பில் சென்னையில் ஏப்.17இ-ல் (நாளை) ஆர்ப்பாட்டம் நடத் தப்படுவதாக அறிவிக்கப்பட்டி ருந்தது. இத்தேர்வுகள் மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்ப் பாட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment