புதுடில்லி, ஏப். 4- இந்தியாவின் கடன் சுமை 2022-2023 நிதி ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு நிலவரப்படி ரூ.150.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஒன் றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் அதிகம் ஆகும். இரண் டாம் ஆண்டில் நாட்டின் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக இருந் தது.
கடன் வாங்கியதற்காக ஒன் றிய அரசு வழங்கியுள்ள கடன் பத்தி ரங்களில் 28.29 சதவீத பத்திரங்களுக்கான காலவரையறை அய்ந்து ஆண்டுகளுக்கும் குறைவானது என்று அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
10 ஆண்டுகால அடிப்படையிலான கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் மூன்றாம் காலாண் டில் 7.33 சதவீதமாக குறைந் துள்ளது.
No comments:
Post a Comment