ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது குறித்து தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்திய உச்சநீதிமன்றம் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசு தனது தரப்பில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கடந்த கால நடவடிக் கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்த போதிலும், அவர்கள் இந்த ஊர்வலத்தை பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்ட முறையில் சிறுபான்மையினருக்கு எதி ரான கலவரத்தை தூண்டுவார்கள் என்று ஆதாரங்களுடன் வாதித்த போதிலும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் கடந்த கால வரலாறு அனைவரும் அறிந்ததே. அவர்கள் சமீபத்தில் கூட பீகாரில் ராம நவமி விழாவைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுபான்மையினரை கொன்ற நிகழ்ச்சிப் போக்குகள் வலு வான ஆதாரங்களாக உள்ளன. ஊர் வலம், பேரணி, பொது நிகழ்ச்சி எது நடத்தினாலும் அங்கே கலவரத்திற்கும், வன்முறைக்கும் முன்கூட்டியே திட்ட மிட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கடந்த கால நடவடிக்கைகளை கணக் கில் எடுத்துக் கொண்டதா என்பது கேள் விக்குறியாக உள்ளது. நாட்டில் ஜன நாயக அமைப்புகள் பேரணி, ஊர்வலம், பொது நிகழ்ச்சிகள் நடத்துவது என்பது ஜனநாயக நடைமுறைதான். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அத்தகைய ஒரு ஜனநாயக இயக்கம் அல்ல. இவர்கள் நோக்கமே சிறுபான்மையினருக்கு எதி ரான வன்முறைக் கலவரங்களை தூண்டி விட்டு பெரும்பான்மை சமூகமாக உள்ள இந்துக்கள் மத்தியில் சிறுபான்மையினர் மீதான ஒரு வெறுப்புணர்வை வளர்ப்பது தான்.
எனவேதான் தமிழ்நாட்டில் அத் தகைய ஒரு பேரணிக்கு அனுமதி தந்தால் அது திட்டமிட்ட வன்முறைக்கு வழி வகுக்கும் என்பதே கடந்த கால அனுபவமாகும். எனவேதான் தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது இல்லை. உச்சநீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு இது குறித்தான மேல் நடவடிக்கைக்கு ஆலோசித்திட வேண்டுமென்று தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை கேட்டுக்கொள்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தினால் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்தும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்தும் சரியான உறுதியான நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment