கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தோல்வி உறுதி! காங்கிரஸ் 140 இடங்கள்வரை பெறும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

கருநாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தோல்வி உறுதி! காங்கிரஸ் 140 இடங்கள்வரை பெறும்!

பெங்களூரு, ஏப்.30- கருநாடகா சட்டப் பேரவைத் தேர்தல்  முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக 7 நிறுவனங்கள் தங்களின்  கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இவற்றில் இரண்டு கருத்துக்  கணிப்புகளில், காங்கிரஸ் தனிப்  பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும், 5 கருத்துக் கணிப்புகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப் பட்டுள்ளது.  

இதில் குறிப்பிடத்தக்க விஷயம்  என்ன வென்றால், ஒரு கருத்துக் கணிப்பு  கூட, பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறுவதாக இல்லை. தேர்தலுக்கு இன்னும் 11 நாள்களே  இருக்கும் நிலையில், ‘ஈடினா’ ‘டிவி 9'  மற்றும் ‘சி ஓட்டர்’, ‘பப்ளிக் டிவி’, ‘ஏசியாநெட்  சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத்’,  ‘நியூஸ் பர்ஸ்ட் - மேட்ரைஸ்’, ‘விஸ்டாரா நியூஸ்’, ‘சவுத் பர்ஸ்ட் - பீப்பிள்ஸ் பல்ஸ்’  எனப் பல் வேறு ஊடகங்கள், தாங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு ஆய் வின் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

வாக்கு வித்தியாசம் 10 சதவிகிதம் அளவிற்கு...

இதில், ‘ஈடினா' தனது கருத்துக் கணிப்பில், ‘‘காங்கிரஸ் கட்சி 132 முதல் 140  இடங்களில் வென்று ஆட்சியமைக்கும். பாஜக 57 முதல் 65 இடங்களையே கைப்பற்றும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 19 முதல் 25 இடங்களில் வெற்றி பெறும்”  என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல் லாது காங்கிரஸ் கட்சிக்கும் - பாஜகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 10 சதவிகிதம் அளவிற்கு இருக்கும் என்றும் ‘ஈடினா' கூறி யுள்ளது. 

காங்கிரஸ் 43 சதவிகித வாக்குகளையும், பா.ஜ.க. 33 சதவிகித வாக்குகளையும், மதச்சார் பற்ற ஜனதா தளம் 16 சதவிகித வாக்குகளையும் பெறும் என்று கணித்துள்ளது. கருநாடகத்தின் 67 சதவிகித மக்கள் பாஜக ஆட்சி தொடரக்கூடாது என்ற மன நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட் டுள்ளது. 

‘டிவி 9 மற்றும் ‘சி ஓட்டர்’ கருத்துக்  கணிப்பில் காங்கிரஸ் 106 முதல் 116 இடங்களையும், பா.ஜ.க. 79 முதல் 89  இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா  தளம் 24 முதல் 34 இடங்களையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. 

‘பப்ளிக் டிவி’ தனது ஆய்வில், காங்கிரஸ் 98  முதல் 108 இடங்களையும், பா.ஜ.க. 85 முதல் 95 இடங்களையும், மதச்சார்பற்ற  ஜனதா தளம் 28 முதல் 33 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. 

‘ஏசியாநெட் சுவர்ணா நியூஸ் - ஜன் கி பாத்’ ஊடகம் நடத்திய ஆய்வில்  பா.ஜ.க. 98 முதல் 109 இடங்களையும், காங்கிரஸ் 89 முதல் 97 இடங் களையும்  கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல ‘நியூஸ் பர்ஸ்ட் - மேட்ரைஸ்’ நிறுவனமும் பா.ஜ.க.வுக்கு 96 முதல் 106 இடங் களும், காங்கிரசுக்கு 84 முதல்  94 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 29 முதல் 34 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. 

‘விஸ்டாரா நியூஸ்’ நடத்திய கருத்துக்  கணிப்பில், பா.ஜ.க. 88 முதல் 93 இடங்களையும், காங்கிரஸ் 84 முதல் 90 இடங்களையும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 23 முதல் 26 இடங்களையும் வெல்லும்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘சவுத் பர்ஸ்ட் - பீப்பிள்ஸ் பல்ஸ்’ நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 95 முதல் 105 இடங்களும், பாஜக 90 முதல்  100 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 முதல் 30 இடங் களும் பெறும்  என கூறப்பட்டுள்ளது. 

குறுக்கு வழியில் 

ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.

கருநாடகத்தில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக 2008 ஆம்  ஆண்டு 110 இடங் களிலும், 2018 ஆம் ஆண்டு 104 இடங்களிலும் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ், மதச்  சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடம் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு  வாங்கி, குறுக்கு வழியில் ஆட்சியில் அமர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை உருவாக்கியுள்ளது

எப்படி பார்த்தாலும் 2023 கருநாடகத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு பின்னடைவாக இருக்கும் என்றும், ஹிஜாப் விவகாரம்,  அரசு டெண்டர்களுக்கு 40 சதவிகித கமிஷன், வேலையில்லாத் திண் டாட்டம், விலைவாசி உயர்வு, ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கான இடஒதுக் கீடு விவகாரம் ஆகிய விவகாரங்கள்,  மாநிலத்தில் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை உருவாக்கி யுள்ளதாகவும் கூறப்படுகிறது.


No comments:

Post a Comment