இந்தியாவில் ஜாதி அகம்பாவம் இருக்கிறவரையில் இந்தியர்கள் தங்களுடைய யோக்கியதையினாலோ, ஒற்றுமையினாலோ, சாமர்த்தியத்தினாலோ அன்னிய ஆட்சியிலிருந்து விலக முடியவே முடியாது. ஒரு சமயம் ஆங்கிலேயரின் கொடுமையினாலோ, முட்டாள்தனத்தினாலோ இந்தியா ஆங்கிலேயர்களை விட்டு விலகினாலும் விலகலாம். ஆனால் இந்தியர் கைக்கு வருமா என்பது மாத்திரம் அதிக சந்தேகந்தான்.
தமிழர்கள் தங்கள் அறியாத்தனத்தினால் வெள்ளைக்காரர்களைத் துரையென்றும், பிராமணர்களை சாமியென்றும் கூப்பிடுவதோடு இவர்களைக் கண்டால் தாமே முன் மரியாதை செய்ய வேண்டுமென்றும், அதிலும் பிராமணச் சிறுவனைக் கண்டாலும் கும்பிடவேண்டியது மத தர்மமென்றும் எண்ணு
கிறார்கள்.
- 12.07.1925 - குடிஅரசிலிருந்து
No comments:
Post a Comment