12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியீடு

சென்னை, ஏப். 26- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தள முகவரியில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.உறுதி மொழி படிவத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு மெசேஜ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment