தமிழ்நாட்டில் 11 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

தமிழ்நாட்டில் 11 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப். 29- தமிழ்நாட்டில் 11 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூ ரிகளைத் தொடங்குவதற்கு ஒன் றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மாநில அளவிலான சுகாதாரத் துறை அனைத்துத் துணை இயக்கு நர்கள் பயிற்சிப் பள்ளி முதலமைச் சர்கள், உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று (28.4.2023) நடைபெற்றது.

 கூட்ட முடிவில் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியதாவது: சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையின்போது துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட 106 அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஆரம்ப சுகா தார நிலையங்களில் ஏஎஸ்வி என்ற பாம்புக்கடி மருந்தும், ஏஆர்வி என்ற நாய்க்கடி மருந்தும் கையிருப்பு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. இந்த மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. மாரடைப் பினால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க இதய பாதுகாப்பு மருந் துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட வுள்ளது.

500 மருத்துவமனைகள்

தாய்-சேய் இறப்பு விகிதம் குறைப்பது போன்ற செயல்பாடு களில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட் டுள்ளது. 708 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 

விரைவில் 500 மருத்துவமனை களை முதலமைச்சர் திறந்து வைக்க வுள்ளார். பழங்களை பழுக்க வைப்ப தற்கு சில வியாபாரிகள் தடை செய்யப் பட்ட ரசாயன முறைகளைப் பயன்ப டுத்துகின்றனர். அதைக் கண்ட றிந்து நடவடிக்கை எடுக்கப்படும். இது கோடை காலம் என்பதால் போலியான குளிர்பானங்கள் பாட்டிலில் அடைத்து விற்பது என்பது காலங்காலமாக நடக்கி றது. அதனை முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.

கடைகளில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்கப் படுவதைத் தடுக்க, மாவட்ட அலுவலர் கள் தங்களுடைய மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6 செவிலியர் பயிற்சி கல்லூரிகள், 25 இடங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. டில்லியில் ஒன்றிய சுகா தாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை 2 மாதங்களுக்கு முன் சந்தித்தபோது, தமிழ்நாட் டிற்கு 30 செவிலியர் பயிற்சி கல்லூரிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

இதைத்தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர்களுடனான கூட் டத்தில், தமிழ்நாட்டிற்கு 100 பயிற்சி இடங்களுடன் 11 புதிய செவிலியர் பயிற்சி கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரத்தைப் பெற்ற பின், இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டடப் பணிகள் தொடங்கப்படும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment