உயர் வகுப்பைச் சேர்ந்தவரின் திரு மணம் அது. மாப்பிள்ளையின் அழைப்பின் பேரில் அவனது நண்பன் ஒருவன் திரு மணத்திற்காக வருகிறான். திருமண ஊர் வலத்தில் அந்த குறிப்பிட்ட உயர் வகுப்பை சேர்ந்தவர்கள் மட்டுமே சென்று கொண்டி ருந்தார்கள்.
அவர்களோடு மணமகனின் நண்பனும் சேர்ந்துகொண்டான். ஊர்வலம் கொஞ்ச தூரம் சென்றவுடன் திடீரென ஒருவர் அந்த இளைஞனைப் பார்த்து கன்னாபின்னா வெனக் கத்தினார்.
‘ஏய் சூத்திரனே... உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் எங்களோடு சமமாக நடந்து வருவாய்? ஜாதி மரபுகள் அனைத் தையும் நீ மீறி விட்டாய்.. நீ எங்களுக்கு சமமானவன் அல்ல... எங்களை அவமதிக் கும் இந்த செயலை செய்வதற்குமுன் நீ ஆயிரம் முறை யோசித்து இருக்க வேண் டும். ஒன்று எங்களுக்கு பின்னால் கடைசி யாக வா, இல்லை; இந்த இடத்தைவிட்டு ஓடி விடு. இப்போது எல்லாம் மக்களுக்கு வெட்கம் இல்லாமல் போய் விட்டது, ஜாதி மரபுகளை இஷ்டத்திற்கு மீறுகிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியில் இவர்களுக்கு அகம்பாவம் ஏற்பட்டுவிட்டது’ என்று அந்த நபர் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார்.
‘நண்பன் அழைத்தானே’ என்று அவனது திருமணத்திற்கு வந்த ஜோதிராவ் எனும் இளைஞன் இந்த வார்த்தைகளால் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான். அழுகையும், ஆத்திரமும் தொண்டைக்குழியை அடைக்க, அவ மானத்தால் அவனது உடல் கூனிக்குறுகியது! வேதனையும், வேகமும் உந்தித்தள்ள ஊர்வலத்தில் இருந்து விலகி, விறுவிறுவென வீடு வந்து சேர்ந்தான்.
அதற்குமேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தந்தையின் முன்னால் உடைந்து அழுதபடியே நடந்ததை விவரித் தான். இதைப்போன்ற எத்தனையோ அவலங்களை ஏற்கெனவே சந்தித்திருந்த இளைஞனின் தந்தை, ‘அவர்கள் சொன்னது சரி தானப்பா.. நாமும் அவர்களும் எப்படி ஒன்றாக முடியும்? நீ செய்த தவறுக்குத் தண்டனை கொடுக்காமல் உன்னைத் துரத்திவிட்டது உயர் வகுப்பினரின் கரு ணையைக் காட்டுகிறது. இப்போதாவது பர வாயில்லை. எங்கள் காலங்களில் இத்தகைய தவறுகள் செய்பவர்களுக்கு யானையின் காலால் மிதிபட்டு சாகும் தண்டனைதான் கிடைக்கும்’ தந்தையின் வார்த்தைகள் இளைஞனின் காதுகளில் நெருப்புத் துண் டங்களாக வந்து விழுந்தன.
‘நீதிக்கோட்பாடுகள்’ என்ற பெயரில் ஜாதி வெறி தாண்டவமாடிய சம்பவங்கள் சிலவற்றையும் தந்தை சொல்லச் சொல்ல அந்த இளைஞனின்அத்தனை அங்கங்களி லும் கோபம் கொப்பளித்தது. அன்றைக்கு இரவு முழுக்க அவனது கண்களுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. நேரிட்ட அவ மானமும் நிலைகொண்ட கோபமும் வயிற் றுக்கும் நெஞ்சுகுழிக்கும் வேகம் குறையா மல் உருண்டு கொண்டிருந்தன.
உலகத்தின் ஆகப்பெரிய சாதனைகளுக் கெல்லாம் அவமானங்களே ஆணிவேராக இருந்திருக்கின்றன. அகிலத்தையே புரட் டிப்போட்ட அத்தனைப் புரட்சிகளையும் தோண்டி எடுத்து பார்த்தால், அவற்றின் அடி நாதமாக அவமானம் இருப்பதைக் காணமுடியும். ஆம்... அவமானத்தின் வலிகளால் நிரம்பி வழிந்த அந்தக் கணங்களில்தான் இந்திய தேசத்தினுடைய சமூகப் புரட்சியின் தந்தை என்றழைக் கப்படும் மகாத்மா ஜோதிராவ் புலே உரு வானார்.
மாற்றத்திற்காக எழுதிக்குவித்தவர்!
ஜோதிராவ் சமூகப் புரட்சியாளர் மட்டு மல்ல; ஏராளமாக எழுதி குவித்திருக்கும் எழுத்தாளர்; கவிஞர். ஜாதி ஒழிப்பு, கல்வி, தாழ்த்தப்பட்டோருக்கான ஆலோசனைகள் போன்றவை குறித்த நூல்கள், துண்டு பிரசுரங்கள், கையேடுகளை ஏராளமாக வெளியிட்டார். பாடல்கள் மூலம் எளிய மக்களிடம் சீர்த்திருத்த கருத்துகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பி, நிறைய பாடல்களை எழுதினார். பிற்கால இந்திய வரலாற்றில் புரட்சியாளர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் பெரும் ஊக்கச் சக்தியாக திகழ்ந்த வீர சிவாஜியின் புகழை ஆங்கிலேய ஆட்சியில் பாடிய முதல் கவிஞர் ஜோதிராவ் தான்.
No comments:
Post a Comment