தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூ.1,08,364 கோடி வரி வசூல்: வருமான வரித்துறை தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

தமிழ்நாடு, புதுச்சேரியில் ரூ.1,08,364 கோடி வரி வசூல்: வருமான வரித்துறை தகவல்

சென்னை, ஏப்.29- 2022-2023ஆம் நிதியாண்டில் வருமான வரி வசூல் ரூ.1,08,364 கோடியாக அதிகரித் துள்ளது என்று தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச் சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு,புதுச்சேரி மாநி லங்களிற்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-2023ஆம் நிதியாண்டில் ரூ.1,08,364 கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,05,300 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வரி வசூல் ரூ.3000 கோடி அதிகமாக கிடைத்துள்ளது.கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 20 சதவீதம் அதிகம். இந்திய அளவில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-2024ஆம் நிதி ஆண்டில் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயத்துள்ளோம். 2022-2023ஆம் நிதி ஆண்டில் வரி ஏய்ப்பு செய்த 7 பேர் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு வரி ஏய்ப்பு செய்த 7 பேருக்கு நீதிமன்றம் வாயி லாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 7 பேருக்கு தண்டனை பெற்று இருப்பது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment