சென்னை,ஏப்.15- கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளவும், உதவிகளைப் பெறவும் 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோடை காலத்தின் தாக்கம் மற்றும் வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைத்தல் அவசியம். அதன்படி, நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் அதிக தண்ணீர் அருந்த வேண்டும். உப்பு - சர்க்கரை நீர் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவை உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்க உதவும். பருவகால பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து பொருள் களை அதிகமாக உட் கொள்ள வேண்டும். காற்றோட்டமான இடங்களில் வசித்தல் அவசியம். மெல்லிய பருத்தி ஆடைகள் சரும நோய்கள் வராமல் தடுக்கும். அவசர உதவிக்கும், ஆலோசனைக்கும் 104 என்ற மக்கள் நல்வாழ்வுத் துறை உதவி மய்யத்தை அழைக்கலாம் என்றனர்.
No comments:
Post a Comment