கிளைகள்தோறும் தெருமுனைக் கூட்டங்கள்,மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பு உரத்தநாடு கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
உரத்தநாடு, ஏப். 9- உரத்தநாடு ஒன்றியம், உரத்தநாடு நகரம், கண்ணந்தங்குடி கீழையூர், கண்ணந்தங்குடி மேலையூர், ஊராட்சி திராவிடர் கழக கிளைக் கழகங்ளின் கலந்துரையாடல் கூட்டம் 4.4.-2023 செவ்வாய் மாலை 5.30 மணி யளவில் உரத்தநாடு பெரியார் மாளி கையில் நடைபெற்றது.
உரத்தநாடு நகர செயலாளர் ரெ. இரஞ்சித்குமார் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். மாநில அமைப் பாளர் இரா. குணசேகரன் இயக்க செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர் அவர்களின் தொண்டின் சிறப்பு குறித்து தொடக்கவுரை யாற்றினார்.
தொடர்ந்து ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் மா.சாக்ரட்டீஸ், ஊரச்சி அ.அறிவாசான், சா.சீமான், கண்ணந் தங்குடி கீழையூர் கிளைக்கழக தலைவர் இரா.செந்தில்குமார், கிளைக்கழக செயலாளர் ப.தாமரைக்கண்ணன், நகர இளைஞரணிதலைவர் பேபி.ரெ.இர மேஷ், நகர இளைஞரணி செயலாளர் ச.பிரபாகரன், நகர துணைச் செயலாளர் வழக்குரைஞர் மாரிமுத்து, தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரமேஷ் உரத்தநாடு நகரத்தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன் ,உரத்தநாடு நகர துணைத்தலைவர் மு.சக்திவேல், ,மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல் , மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அ.உத்திராபதி, ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செய லாளர் மாநல்.பரமசிவம், கழக செயல் பாடுகள் குறித்து உரையாற்றினார்கள்,
மாவட்டச்செயலாளர் அ.அருண கிரி, மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மநில கலைத்துறை செயலாளர் ச.சித் தார்த்தன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அனைவரும் செயல்பட வேண் டும் என வழியுறுத்தி உரையாற்றினர்.
கூட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் இயக்கத்தின் கட்டுபாடுகள் குறித்தும் கொள்கை தலைமையை முன்னிறுத்தி கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும் என உரையாற்றினார்.
கழக பிரச்சாரம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்புகள், கழகத்தோழர்கள் அர்ப்பணிப்பு உணர் வுடன் செயல்பட வேண்டியதின் அவசி யம் குறித்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இறுதியாக உரை யாற்றினார் மண்டலக்கோட்டை செந் தில் நன்றி கூறினார்.
தெற்கு நத்தம் க.சசிக்குமார், தெற்கு நத்தம் நாகராசு தந்தையார் சிவஞானம், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன் தந் தையார் நாராயணன், தலையாமங்கலம் இராமதாஸ் தந்தையார் தங்கையன், மண்டல கோட்டை ஞானம் தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனை கூட்டங் களை கிளைகள் தோறும் நடத்துவது,
புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்புகளை புதுப்பிப்பது,
விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது,
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது,
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண் டலமாக அறிவிக்கப்பட்டுள்ள உரத்த நாடு வட்டத்தில் 11 கிராமங்களில் நிலக் கரி சுரங்கம் அமைக்கப்படும் என ஒன் றிய அரசு அறிவித்துள்ளது உரத்தநாடு மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி யுள்ளார்கள் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய திராவிடர் கழகம் வழி யுறுத்துகிறது
மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
சடையார்கோவில்
உரத்தநாடு ஒன்றியம், சடையார்கோவில், தலையாமங்கலம், துறையுண்டார் கோட்டை, மன்றாயர் தெரு திராவிடர் கழக கிளைகழகங்ளின் கலந்துரையாடல் கூட்டம் 3.04.-2023 திங்கள் மாலை 6.30 மணியளவில் சடையார்கோவிலில் நடைபெற்றது.பெரியார்பகுத்தறிவு கலை இலக்கிய அணிமாவட்டத் தலைவர் சடையார் கோவில் வெ.நாராயணசாமி அனை வரையும் வரவேற்று உரையாற்றினார் மண்டலத் தலைவர் மு.அய்யனார் தலைமையேற்று கழக கட்டுப்பாடுகள் குறித்து உரையாற்றினார் . மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார், தொடர்ந்து ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், ஒன்றிய அமைப்பாளர் பு.செந்தில் குமார், ஒன்றியதுனைத் தலைவர் தலை யாமங்கலம் இரா.துரைராசு, ஒன்றிய இளைஞரணி தலைவர் துறையுண் டார்கோட்டை நா.அன்பரசு,வடக்கு பகுதி செயலாளர் ப. இராஜகோபால், சடையார்கோவில் கிளை செயலாளர் குழந்தைவேல், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் மன்றோ. மதியழகன், மாவட்ட துணைச்செயலாளர் அ.உத் திராபதி ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்கள், மாவட் டச் செயலாளர் அ. அருணகிரி, மண் டல செயலாளர் க.குருசாமி, மாவட்டத் தலைவர் சி. அமர்சிங் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் அனை வரும் செயல்பட வேண்டும் என வழி யுறுத்தி உரையாற்றினர்.
கழக பிரச்சாரம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் இறுதியாக உரை யாற்றினார் சடையார்கோவில் கிளைத தலைவர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.
தெற்கு நத்தம் க.சசிக்குமார், தெற்கு நத்தம் நாகராசு தந்தையார் சிவஞானம், ஒக்கநாடு மேலையூர் வீரத்தமிழன் தந் தையார் நாராயணன், தலையாமங்கலம் இராமதாஸ் தந்தையார் தங்கையன், மண்டலகோட்டை ஞானம் தாயார் கோவிந்தம்மாள் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தந்தைபெரியாரின் மனித உரிமை போர் வைக்கம் போராட்ட 100 ஆவது ஆண்டு சிறப்பு தெருமுனை கூட்டங் களை கிளைகள் தோறும் நடத்துவது,
புதிய உறுப்பினர்களை சேர்த்து கழக அமைப்புகளை புதுப்பிப்பது,
விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது,
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment