மேலும் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 8, 2023

மேலும் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவிப்பு

சென்னை, ஏப். 8- தமிழ்நாட்டில் மேலும் 100 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் உணவு மற்றும் உணவுப் பொருட் கள் வழங்கல் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் 6.4.2023 அன்று நடைபெற்றது. இதில் பேசிய சட்டமன்ற உறுப்பி னர்கள் கேள்விகளுக்கு இந்த துறையின் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்தார்.

பின்னர் அவர்,உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:- 

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 100நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ரூ.33 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியின் கீழ் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பொது வினியோக திட்டப்பொருட்களின் சேமிப்பு கொள்ளளவை மேம்படுத்துவதற் காக மொத்தம் 9 ஆயிரம் டன் கொள்ளளவு உடைய 4 புதிய சேமிப்பு கிடங்குகள் ரூ.6 கோடியே 50லட்சம் மதிப்பீட்டில் கட்டப் படும்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 52 ஆயிரம் டன் கொள்ளளவுடன் கூடிய மேற்கூரை அமைப்புடன் நெல் சேமிப்பு கிடங்குகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப் படும்.

சென்னையில் கோபால புரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் 2 அமுதம் பல்பொருள் அங்காடிகள் பொது மக்கள் வசதிக்காகரூ.50லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மேம்படுத்தப் படும்.

2023ஆம் ஆண்டு அய்.நா. மன் றத்தால் பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படு வதை முன்னிட்டு பாரம்பரிய சிறு தானிய உணவு குறித்து மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டார்.

No comments:

Post a Comment