''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத மொழி ஹிந்தி'' - சர்.சி.பி.இராமசாமி
சென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி ஹிந்தியின் தகுதியின் மையை விளக்கிப் பேசுகையில் குறிப் பிட்டதாவது:
‘மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்த சிப்பாய்கள் ஒரே பாசறையில் வசித்து வந்தனர். அப்பொழுது அவர்கள் தாம் பேசு வதற்கு வசதியாக அரபிக், பாரசீகம், சமஸ் கிருதம், வட்டார மொழி ஆகிய வற்றிலிருந்து ஒரு புது மொழியை உண்டாக்கினர்; அதுதான் 'ஹிந்தி' மொழி என வழக்கில் வந்துள்ளது.'
‘சமஸ்கிருதம், லத்தீன், கிரீக், இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு, அரபிக் போன்ற மொழிகளைப் போல ஹிந்தி வளர்ச்சி யடைந்த மொழியல்ல என்பது தெளிவு.'
‘ஹிந்தி முதலில் தன்னை வளப் படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் ஹிந்தி மொழி சொல் வளமின்றி வறுமையில் வாடுகிறது.'
‘எனக்கு ஹிந்தி தெரியும், ஆச்சாரி யார் அவர்களுக்கும் ஹிந்தி தெரியும். அப்துல்கலாம் ஆசாதுக்கு ஹிந்தி தெரியும். ஆனால், ஆசாத் பேசும் ஹிந்தி எனக்கும், ராஜாஜிக்கும் புரியாது; ஆசாத் தனது ஹிந்தியில் பாரசீக வார்த்தைகளை அதிகம் சேர்க்கிறார். நானும், ராஜாஜியும் பேசும் ஹிந்தியில் சமஸ்கிருத வார்த்தைகளை அதிகம் சேர்த்து அதைப் பேசுவோம் மற்றும் வேறு விதமாகவும் பலர் பேசும் ஹிந்தி யும் இருக்கிறது. சென்ற நவம்பர் 18 ஆம் தேதி பார்லிமெண்டில் ஒரு ரசமான சம்பவம் நடைபெற்றது. அனூர் சந்த் என்பவர் பல உப கேள்விகளைக் கேட்டார். உதவியமைச்சர் திருமதி லட்சுமி மேனன் தனக்குக் கேள்விகள் புரியவில்லை என்று சொன்னார்; பிரதமர் நேரு எழுந்து தனக்கும் அந்தக் கேள்விகள் புரியவில்லை என்று கூறினார்.
எனக்கும், ராஜாஜிக்கும் ஆசாத் தின் ஹிந்தி தெரியாது; திருமதி லட்சுமி மேனனுக்கும், நேருவுக்கும் அனூர்சந்தின் ஹிந்தி புரியவில்லை. மற்றும் காசி சர்வகலாசாலையில் எனக்கு ஏற் பட்ட அனுபவத்தில் தெரிந்து கொண்டது. பீகார் மாணவர்கள் பேசிய ஹிந்தியை உத்தரப்பிரதேச மாணவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே.''
No comments:
Post a Comment