"வீரமணி வந்திருக்காரு, நான் அங்க இருக்கேன், வாய்ப்பிருந்தா கண்டிப்பா வாங்க" என்று கூறியும், தங்களை தொடர்பு கொண்டவர்களிடமெல்லாம் "நான் வீரமணி கூட்டத்தில் இருக்கிறேன்" என்று பலரும் கூறிக்கொண்டிருந்த வேளையி லும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயண பொதுக்கூட்டம் 23ஆவது நாளாக நேற்று (28.2.2023) நடை பெற்றது. இதன் 44ஆவது கூட்டம் பேரா வூரணியிலும் அதன்பின் 45ஆவது கூட் டம் அறந்தாங்கியிலும் நடைபெற்றது.
இந்த சுற்றுப்பயணத்தில், ஒவ்வொரு இடத்திற்கும் போகும்போதும், வழியில் வண்டியினுள் இருக்கும் ஆசிரியரை பார்க்கும் மக்கள், "வீரமணி போறாரு, அங்க பாரு அய்யா போறாரு, ஆசிரியர் போறாரு" என கூறிக் கொண்டே இருந் தனர். பேராவூரணியில் நாற்காலியில் உட் கார்ந்திருந்தவர்களை விட, இரு மடங்கு கூட்டம் சுற்றியிருந்த கடைகளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தின் ஒரு கட்டத்தில், "பெரியா ருக்கு சிறுநீர் வெளிவரும் இயற்கை பாதையில் அடைப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் வயிற்றில் ஓட்டை போட்டு, ஒரு சிறிய டியூப் வைத்தனர். இதனால் அவ் வப்போது சிறுநீர் கசிந்து கொண்டே இருக் கும், பெரியார் கூட்டத்தில் சொல்வார், எனக்கு ஆறு கால்கள் என்னால் மற்ற இருவர் இல்லாமல் எந்திரிக்கக் கூட முடியாது" என்று பெரியார் அனுபவித்த வலிகள் குறித்து ஆசிரியர் பேசும்போது கூட்டம் அமைதி யில் ஆழ்ந்தது.
"தொட்டாலே தீட்டு, பார்த்தாலே தீட்டு என்ற கொடுமை ஒழிந்தது யாரால சரஸ்வதி பூஜை பண்ணதுனாலயா?" என்று கேட்டவுடன் கூட்டத்தில் சாமானியர் இருவர் "இல்லை பெரியாரால்" என்று பதில் கூறினர்.
ராஜலட்சுமி என்பவர், "அய்யா பெண் ணுரிமை பத்தி ரொம்ப நல்லா பேசுனாங்க. "ஒரு பெண் படிச்சா, ஒரு குடும்பமே படிச்ச மாதிரினு சொன்னாருல - அது உண்மை, அத நான் நேரடியாக அனுபவிச்சேன்" என்றார்.
உமர் என்பவரிடம் ஆசிரியரின் பேச்சு குறித்து கேட்ட போது, "எனக்கு வயது 60 ஆகிறது. ஆசிரியரின் கூட்டங் கள் நிறைய கேட்டிருக்கிறேன். நிறைய நல்ல கருத்துகளை கூறியிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முக்கியமா வேலை வாய்ப்புப் பத்திப் பேசுனது அருமையா இருந்துச்சு. ஆசிரியர் தொடர்ந்து பேச ணும், அது நடைமுறைக்கும் வரணும்." என்று தனது கருத்தைக் கூறினார்.
இந்திய தேசிய காங்கிரசின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமல் பாட்ஷா, 1000 ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிக்கொண்டார். அவர் நம்மிடம் பேசுகையில், "திராவிட மாடலை வரலாற் றோடு மிகத் தெளிவாக விளக்கினார். புத்தகங்கள் வாங்கிக்கொண்டார். மற்றவர்களை விட மிகத் தெளிவாக திராவிட தத்துவங்களை விளக்கினார். அய்யாவின் இந்தத் முயற்சி நாட்டுக்கு மிகத் தேவை யான ஒன்று."
பழனிச்சாமி என்பவர், "அய்யாவின் கருத்துகள் ரொம்ப நல்லா இருந்துச்சு, இந்த வயசுலயும் இவ்வளவு தூரம் வந் துருக்காரு, சந்தோசம் என்று கூறினார்.
- நா.கமல் குமார்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment