தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 18, 2023

தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது!

தூத்துக்குடி, மார்ச் 18- சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலை யில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட தோடு அவர்கள் வந்த சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகு தியில் தனியார் கிரஷர் ஆலை ஒன்று செயல் பட்டு வருகிறது. இங்கு மேலாளராக நவீன் குமார் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் இடைச்சிவிளை ஆனந்த விளையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளரார் பூபதிபாண்டியன், திருச்செந்தூர் சரண் (எ) ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்திற்கு காரில் வந்துள் ளனர்.

அங்கு வந்த அவர்கள் அந்த நிறுவனத்தில் மேலாளர் நவீன் குமாரி டம் நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது மேலாளர் நவீன் குமார், பூபதி பாண்டியிடம் தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், நிறுவன உரிமையாளர் வந்த பின்னர் அவரிடம் நன்கொடை வாங்கி செல்லுமாறும் கூறியுள் ளார். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் இருவரும் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அப்போ தும் நிறுவன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ளுமாறு நவீன் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம டைந்த பாஜக நிர்வாகிகள் பூபதிபாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அந்த நிறுவனத்தின் நுழைவு வாயி லில் தாங்கள் வந்த 2 கார்களையும் நிறுத்தி ரகளை செய்யத் தொடங் கினர். அதோடு அங்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத் திலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு பணி யில் இருந்த மேலாளர் நவீன்குமாருக்கு என்பவரை கொலை மிரட்டல் விடுத்ததாக வும் கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தான்குளம் காவல் அதிகாரிகள், 506/1, 341, 294/ஙி, ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிரஷரின் முன்பு அடாவடி செய்த பூபதி பாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய 2 பேரை யும் கைது செய்தனர். அதோடு அந்த நிறுவனத் தின் முன்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இது போன்று பாஜக வினர் அடிக்கடி அராஜக செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அண்மையில் கூட திருக் கோவிலூர் பகுதியில் குடிப்பதற்காக தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக நகர செயலாளர் அறிவழ கனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment