சென்னை, மார்ச் 2- சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் 1.3.2023 அன்று ஏழை - எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை நடத்தியது. தமிழ்நாடு முதலமைச் சரின் 70ஆவது பிறந்த நாளை யொட்டி நடைபெற்ற இவ்விழாவில், சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள், 600 பயனாளி களுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கி பயனாளிகளுக்கு செயற்கைக் கால், மூன்று சக்கர சைக்கிள், ஊன்று கோல், சக்கர நாற்காலி, கண்ணாடி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட உபகர ணங்களை வழங்கினார்.
இதில் கங்காபிரசாத், அனூப் சந்த் பிராக்சா, பிரமோத் சோப்ரா, டாக்டர் புவனேஸ்வரி ராஜேந் திரன், டாக்டர் சுரேந்தர் குமார் போரா, பிரகாஷ் சந்த் குலேச்சா, மதன்லால் சவுவாட்டியா, வழக் குரைஞர் ஷர்னிக் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆதி நாத் ஜெயின் டிரஸ்டின் நிர்வாகி மனோஜ் ஜெயின், “திருமதி கஸ்தூரிபாய் கவாத் நினைவாக அவரது குடும்பத்தினர் திருமதி ஆஷிபாய் ரானுலால், தேவ்ராஜ் குலேச்சா ஆகியோரது ஆதர வோடு இந்த உபகரணங்கள் ஏழை - எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட் டுள்ளன.
கடந்த 43 ஆண்டுகளாக ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் சார்பில் 12 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இது போன்ற இலவச சேவைகளை நாங்கள் வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment