பெங்களூரு, மார்ச் 4- ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினரின் மகன் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.6.10 கோடி சிக்கியது. இந்த வழக்கில் பா.ஜனதா சட்டமன்ற உறுப் பினரை கைது செய்ய லோக் அயுக்தா காவல்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
ரூ.81 லட்சம் கொடுத்தால், ஒரு ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொடுப்பதாக பாஜக சடடமன்ற உறுப்பினர் மகன் பிரசாந்த் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. பெங்களூரு கிரசென்ட் ரோட்டில் உள்ள மாடால் விருபாக்ஷப்பா அலுவலகத்தில் வைத்து ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது அதிகாரிகளிடம் பிரசாந்த் சிக்கி இருந்தார். அப் போது அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணத்தை எடுத்து பிரசாந்த் திடீரென்று வாயில் போட்டு விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லோக் அயுக்தா காவலர்கள், பிரசாந்தின் வாயில் இருந்து அந்த ஆவ ணத்தை வெளியில் எடுத்தனர். அதனை ரசாயனம் மூலம் சுத்தம் செய்து அந்த ஆவணத்தை பாதுகாத்துள்ளனர். அதனை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக லோக் அயுக்தா காவல்துறையினர் சேர்த்திருப்பதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே பருவமாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை, மார்ச் 4- தமிழ்நாட்டில் பருவகால மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல், தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீத பேருக்கு இன்புளூ யன்சா (influenza) வைரஸ் பாதிப்பு உள்ளது. இது சாதாரண சளிக்காய்ச்சல் தான். இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம். காய்ச்சல் மருத்துவரை அணுக வேண்டும். கோடையில் குறைய தொடங்கும் காய்ச்சல் பாதிப்புகள், நடப்பாண்டில் மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசைத்தறி நெசவாளர்களுக்கான
இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு
தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, மார்ச் 4- விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 2 மாதத்துக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது தற்போதைய ஆளும்கட்சி தரப்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அதில், விசைத்தறிக்கு 2 மாதத்துக்கு 750 யூனிட் ஆக உள்ள இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். இந்த சலுகை விசைத்தறி, பாய், நெசவு தொழிலுக்கும் அளிக்கப்படும். விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் அரசு முழுமையாக வழங்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதி, இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தநிலையில், கைத்தறிகள் ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், ''விசைத்தறி நெசவா ளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் யூனிட்டை 751இல் இருந்து 1,000 ஆக உயர்த்தும் வகை யில், ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற வீதம், தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.21.92 கோடி நிதிக்கு கூடுதலாக ரூ.31.70 கோடியை சேர்த்து அளித்து, மொத்தம் ரூ.53.62 கோடியை மானியமாக வழங்க வேண்டும்'' என்று கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 2 மாதங்களுக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி உத்தரவிடு கிறது. யூனிட்டுக்கு 75 பைசா வீதம் கட்டவேண்டிய கட்டணம் மானியமாக ஒதுக்கப்படுகிறது இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment