புதுடில்லி, மார்ச் 20-ண இந்தியா டுடே குழுமம் சார்பில் டில்லியில் கடந்த இரு நாட்களாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச் சர் ஜெய்சங்கர் 18.3.2023 அன்று பங்கேற்றார்.
அப்போது அவர் கூறி யதாவது: இந்திய, சீன உறவு சவாலான, அசாதா ரண சூழ்நிலையில் இருக் கிறது. இதன் காரணமாக சீன எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நில வுகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், படைகள் திரும்பப் பெற்ற நடவடிக்கைகளுக்குப் பிறகும் நிலைமை சீராக வில்லை. இந்திய ராணுவத் தின் கணிப்பின்படி, எல் லையில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. சீனாவின் புதிய வெளி யுறவு அமைச்சராக கீன் காங் பதவியேற்றிருக்கி றார். அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகி றேன்.
எல்லைப் பிரச்சி னைக்கு தீர்வு காண சீனா நடவடிக்கை எடுக்க வேண் டும். பதற்றத்தை தணிக் கும் நடவடிக்கைகளை அந்த நாடு முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு வெளியுறவு அமைச்சர் அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
No comments:
Post a Comment