எல்லாம் தேர்தல் திருவிளையாடல்! கருநாடகத்தைத் தொடர்ந்து உ.பி.யிலும் குற்றவாளிகள் விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 9, 2023

எல்லாம் தேர்தல் திருவிளையாடல்! கருநாடகத்தைத் தொடர்ந்து உ.பி.யிலும் குற்றவாளிகள் விடுதலை

லக்னோ, மார்ச் 9 ஆயுள் தண் டனை பெற்ற  கைதிகளை விடுவிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய் துள்ளது. இதற்காக, அம்மாநிலத் தின் 75 மாவட்ட சிறைகளிலும் இருப்பவர்களின் விவரங்களை கேட்டுள்ளார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன் னிட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு தன் சிறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த வருடம் முதல் துவங்கிய இந்த மாற்றங்களில் புதிதாக ஒரு முடிவை பாஜக ஆளும் அரசு எடுத்துள்ளது.

எழுபதுக்கும் அதிகமான மூத்த வயது கைதிகளும் பலன் பெற உள் ளனர். இந்த இரண்டு தரப்பினரை சிறைகளில் வைத்து பராமரிப்பது உபி அரசுக்கு பெரும் சிக்கலாக உள்ளது. இந்த இரண்டு வகை கைதிகளின் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே இந்த விடுதலை வாய்ப்பு அவர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. இந்த முடிவில் தீவிரவாதக் குற்றங்களை செய்து ஆயுள் தண்டனை அனுப வித்து வரும் கைதிகளுக்கு பலன் கிடைக்குமா? என்பது தெரிய வில்லை.

  விவரங்களை கேட்டு, தலைமை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உபியின் சிறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவற்றை இரண்டு வாரங்களில் அனுப்பக் கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை பெற்ற பின் உபி சட்டத் துறையின் சேவை ஆணையம், அவர்களை விடுவிப்பதற்கான விதி களை தம் அரசிற்கு பரிந்துரைக்கும். இதன் மீது முதலமைச்சர் யோகி இறுதி முடிவு எடுத்து விடு தலைக்கான தேதியை அறிவிக்க உள்ளார்.

இதுபோல், உபியின் கைதி களுக்கு சாதகமான பாஜக அரசால் அளிக்கப்படுவது புதிதல்ல. தண் டனைக் காலம் முடிந்தும் அதனு டன் சேர்த்து விதிக்கப்பட்ட அப ராதத் தொகை கட்ட முடியாமலும் பல சிறைவாசிகள் உபியில் உள்ளனர். 

இவர்களுக்காகவும் ஒரு திட்டம் வகுத்து அவர்கள் விடு தலைக்கு உதவ உபி முதலமைச்சர் யோகி அறிவித்திருந்தார். கைதி களுக்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு தேநீர், அனைத்து மதங்களின் விழா  காலங்களில் சிறப்பு உணவு உள் ளிட்ட வசதிகள் கூடுதலாக அறி விக்கப்பட்டன.

பெரும்பாலான சிறைக் கைதிகள் அறைகளில் அடைக் கப்படுவதும் குறைந்து வருகிறது. ஒரே குடும்பத்தின் கைதிகளை சிறைகளின் உள்ளே சந்தித்து பேச அனுமதிக்கப்படுவது உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் உபியில் படிப்படியாக அறிமுக மாகி வருவது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கினாலே பாஜக விற்கு சிறைக்கைதிகள் மீது பரிவு வந்துவிடுகிறது


No comments:

Post a Comment