மதுரை, மார்ச் 9- ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்த மியூசியம் அமைப்பதற் கான இடம் தொல்லியல் துறையிடம் ஒப்படைக் கப் பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.'
ராமநாதபுரம் மோர் பண்ணை தீரன் திருமுரு கன் தாக்கல் செய்த பொது நல மனு:'
ராமநாதபுரம் மாவட் டத்தில் வைகை ஆறு, வங்காள விரிகுடா சங்க மிக்கும் இடத்தில் அழ கன்குளம் உள்ளது. இது சங்க காலத்தில் முக்கிய துறைமுக நகரமாக இருந் தது. இங்கு தமிழ்நாடு தொல்லியல்துறை சார் பில் 1980 முதல் 2017 வரை பல கட்ட அகழாய் வுகள் மேற்கொள்ளப்பட் டன. பழங்கால பொருட் கள், ஆபரணங்கள் கண் டெடுக்கப்பட்டன.
தொழிற்சாலைகள் இருந்துள்ளன. அழகன் குளம் கி.மு.,345க்கு முற் பட்ட நாகரீகம் என தெரியவந்துள்ளது. வெளி நாடுகளுடன் வணிகத் தொடர்புகள் இருந்துள் ளன. '
அகழாய்வில் கண்டெ டுக்கப்பட்ட பொருட் களை ராமநாதபுரம் அரசு மியூசியம் அல்லது அரசின் ஏதேனும் ஒரு மியூசியத்தில் காட்சிப் படுத்த வேண்டும்.
மேலும் அகழாய்வை தொடர வேண்டும்.
இதுவரை மேற் கொண்ட அக ழாய்வு குறித்து தொல்லியல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண் டும். இவ்வாறு தீரன் திரு முருகன் மனு செய்தார்.'
நீதிபதிகள் ஆர்.சுப் பிரமணியன், எல்.விக் டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.'
தமிழ்நாடு அரசு தரப்பு: அழகன் குளம் அகழாய்வு பகுதியில் மியூசியம் அமைக்க தேவையான நிலம் வரு வாய்த்துறை மூலம் தொல்லியல் துறை யிடம் ஒப்படைக் கப்பட்டுள் ளது.
இதர பணி முடிந்ததும் விரைவில் மியூசியம் அமைக்கப்படும். 2015-2016 மற்றும் 2016-2017 இல் நடந்த அகழாய்வு அறிக்கை நிபுணர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த 3 மாதங்களில் அழகன்குளம் அகழாய்வு இறுதி அறிக்கை வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment