நெற்றியில் பொட்டு எங்கே? கருநாடக பி.ஜே.பி. எம்.பி.யின் அடாவடித்தனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 22, 2023

நெற்றியில் பொட்டு எங்கே? கருநாடக பி.ஜே.பி. எம்.பி.யின் அடாவடித்தனம்!

பெங்களூரு, மார்ச் 22  கருநாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு சந்தையைப் பார்வையிட கருநாடக மாநில பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.முனுசாமி சென்றிருந்தார். அப்போது ஆடை விற்பனை அரங்கம் ஒன்றில் விற்பனையாளராக இருந்த பெண், பொட்டு வைக்காமல் இருப்பதைப் பார்த்து கோபமாகப் பேசினார்.

''உன் கணவர் இறந்துவிட்டாரா? கணவர் இறந்தால் மட்டுமே பொட்டு இல்லாமல் இருப்பார்கள். உயிரோடு இருக்கும் கணவரை நீ கொலை செய்கிறாயே'' என்று மோசமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள வர்களிடம் உங்கள் மனைவியர் பொட்டு வைக் கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள்'' என்று கூறி யுள்ளார்.

உண்மையில் 

நெற்றிப் பொட்டின் கதை என்ன?

''மலட்டு நிலத்தை மாதவிலக்கான பெண்களைக் கொண்டு உழச் செய்யின் விளைச்சல் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஒரு காலத்தில் நிலவியது. மாத விலக்கு சினைப்படும் வளத்தை அறிமுகப்படுத்துவது என்பது உண்மையே. இச்சிறப்பை அறிவிக்கும் முகமாகவே புராதன காலத்தில் மாத விலக்கு வேளை ஏற்படும் இரத்தக்கசிவைத் திலகமாக நெற்றியில் பெண்கள் இட்டுத் தமது கருவளத்தைத் தெரிவித்து வந்தனர் என்பர். இன்றும் இவ்வழக்கம் குங்குமப் பொட்டாக, மங்கலச் சின்னமாக நாள்தோறும் பெண்களின் நெற்றியில் திகழ்வதைக் காண்கிறோம்.''

(அட ஆபாசமே!)

திரு.செ.கணேசலிங்கன் எழுதிய

''பெண்ணடிமை தீர' என்ற நூலிலிருந்து...


No comments:

Post a Comment