தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தில் கடந்த 26 நாள்களாக பங்கேற்று தொண்டாற்றிய கொள்கை பயணத் தோழர்களுக்கு நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழர்தலைவர் ஆசிரியரின் உதவியாளர்கள், கழக சொற் பொழிவாளர்கள், நிழற் பட கலைஞர்கள், பெரியார்வலைக்காட்சி தோழர்கள், புத்தக விற்பனைக்குழு தோழர்கள், ஒருங்கிணைப் பாளர்கள். அமைப்புச் செயலாளர்கள், மாநில தொழிலாளரணி செயலாளர், செய்தியாளர்கள், ஓட்டுநர்கள் உட்பட தொண் டாற்றிய அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், நன்றிகள்!
ஆங்காங்கே ஏற்படும் சில இடர்ப்பாடுகளை சரிசெய்து பரப்புரைப்பயணம் தடைபடாமல் நடைபெற செயலாற்றிய கழகத் துணைத்தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் மானமிகு வீ. அன்புராஜ் ஆகி யோருக்கும் நன்றிகள்!
மூன்று கட்டமாக நடைபெற்ற பரப்புரைப் பயணத்தில் 45 பொதுக்கூட்டங்களையும் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவிற்கு சிறப்பாக ஏற்பாடுகளை செய்து பரப்புரைப் பயணத்தை வெற்றியடைய செய்த திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி, தொழிலாள ரணி உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, கிளைக்கழக பொறுப்பாளர்கள், மற்றும் தோழர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாராட்டி மகிழ்கிறோம்.
அனைத்து மாவட்டங்களிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வரவேற்று உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கட்சிப் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், பெரியார் பற்றாளர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்
உடனுக்குடன் செய்தியை வெளியிட்டு சிறப்பித்த ‘விடுதலை' குழுமத்திற்கும், அச்சு, மின்னனு ஊடகங்களுக்கும் நன்றிகள்!
தினமும் ஆசிரியர் தங்கியிருக்கும் ஊருக்கே விடுதலை நாளிதழை அனுப்பி வைத்து கடமையாற்றிய திருச்சி ‘விடுதலை' பொறுப்பாளர்களுக்கும் நன்றி! சிறப்பான பாதுகாப்பு அளித்து கடமையாற்றிய தமிழ்நாடு காவல் துறைக்கும் நமது நன்றிகள்
90 வயதிலும் கடந்த 26 நாட்களாக களைப்போ, சோர்வோ இல்லாமல் உற்சாகமாக பயணித்ததோடு எங்களுக்கும் உற்சாகம் குறையாமல் வழிநடத்திய வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசியர் அய்யா அவர்களுக்கு தலைதாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்
தந்தை பெரியாரை பார்க்காத நாங்கள் பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட நீங்கள் (தமிழர் தலைவர் ஆசிரியர்) வாழும் காலத்தில் வாழ்கிறோம், தங்கள் தலைமையின்கீழ் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளோம், அதைவிட தங்களோடு பயணிக்கும் வாய்ப்பை வாழ்க்கையில் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறோம். ஆசிரியர் அய்யா அடிக்கடி சொல்லுவார்கள் நான் பெரியாரை தலைவராகப் பெற்றதற்கு என் முதுகை நானே தட்டிக்கொள்வேன்.
இப்போது நாங்கள் சொல்லுகிறோம் "தங்கள் தலைமையின்கீழ் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றதற்கு எங்கள் முதுகை நாங்களே தட்டிக்கொள்கிறோம். அய்யா!
அனைவருக்கும் மீண்டும் நன்றி!
மார்ச் 5ஆம் தேதி நான்காம் கட்ட பரப்புரைப் பயணத்தில் தஞ்சையில் மீண்டும் சந்திப்போம்
அன்புடன்
பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்கள்
No comments:
Post a Comment