நீதியே வெல்லும்: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

நீதியே வெல்லும்: ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆதரவு

சென்னை, மார்ச். 24 "எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற் போது ஜனநாயக உரிமை களையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக் கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், "தாம் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என அவரே விளக்கம் அளித்துவிட்ட பின்னரும், ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவரை அவரது பேச்சுக்காகத் தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது என்பதோடு, இதுவரை நாம் பார்த்திராத ஒன்றாகும். எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பாஜகவின் போக்கு, தற்போது ஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது. இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும். சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறேன். இறுதியில் நீதியே வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment