டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் லட்சணம்: ரயில் நிலைய டிஜிட்டல் அறிவிப்பு திரையில் ஆபாசப்படம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் லட்சணம்: ரயில் நிலைய டிஜிட்டல் அறிவிப்பு திரையில் ஆபாசப்படம்

பாட்னா, மார்ச் 21-- பீகாரில் பாட்னா ரயில் நிலையத்தின் விளம்பர திரையில் நள்ளிரவில் திடீரென ஓடிய ஆபாசக் காட் சிப் பதிவால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 பீகாரில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் வழக்கம் போல், தங்களது ரயில்களை பிடிப்பதற்காக ஆண்கள், பெண் கள் என குடும்பத்துடன் பயணிகள் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தில் இருந்த விளம்பர பலகையின் திரையில் இரவு 9.30 மணியளவில் திடீ ரென ஆபாசக் காட்சிப் பதிவு ஓடியது. இதுபற்றிய காட்சிகள், சத்தங்களை கேட்டு திடுக்கிட்டு பார்த்த பயணிகள் பின்னர் தங்க ளது முகங்களை திருப்பிக் கொண்டனர். இதனால் பயணிகள் மத்தியில் கலவரம் ஏற்பட்டது. இதனை அறிந்து, ரயில்வே காவல் துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ரயில் நிலைய நிர்வாகம் அறிந்ததும், உடனடியாக திரை அணைக்கப் பட்டது. இதன்பின், பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது. இணையதள குற்றவாளிகள் சிலர் ஹேக்கிங் செய்து இது போன்ற ஆபாச காட்சிப் பதிவு களை ஒளிபரப்பியிருக்க வேண் டும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ரயில்வே கோட்டங் கள் ஒன்றிணைக்கப்பட்டு அரசின் அறிவிப்புகள் விளம்பரங் கள் போன்றவை ஒளிபரப்படும், இடை இடையே ரயில் நிலையத் தில் ரயில் வரும் செல்லும் நேரமும் அறிவிக்கப்படும் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி ஆபாசப்படத்தை ஓடவிட் டுள்ளனர். 

No comments:

Post a Comment