சென்னை,மார்ச்14- அலைபேசி பறிப்பு நிகழ்வுகளை தடுக்கும் வகையில், பாது காப்பு செயலியை தங்களது அலை பேசியில் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக் கோரி, மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்ட சினிமா நகைச்சுவை காட்சிப்பதிவு தற்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை மாநகர காவல் எல்லையில் அலைபேசி பறிப்பு நிகழ்வு களை தடுக்கவும், பொதுமக்களுக்கு அலைபேசி பறிப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யிலும் சென்னை மாநகர காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அலைபேசி பறிப்பு நிகழ்வுகள் அங்காங்கே நடந்து வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சென்னை மாநகர காவல்துறை சார்பில்‘Anti- Theft Software’ அறி முகம் செய்துள்ளது. இந்த செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்தால், அலைபேசி தொலைந்து போனாலோ அல்லது வழிப்பறி செய்யப்பட்டலோ செயலியின் மூலம் எளிமையாக கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்.
எனவே, இந்த செயலியை பொது மக்கள் தங்களது அலைபேசியில் பதி விறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மாநகர காவல்துறை சார்பில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் மாநகர காவல்துறை டிவிட்டர் பக்கத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேல் ‘தவம்’ என்ற திரைப்படத்தில் மெரினா கடற்கரையில் பெண்ணிடம் நகைகளை பறித்துக் கொண்டு குதிரையில் தப்பித்து செல்வார். ஆனால் அந்தக் குதிரை சிறிது தொலைவு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்துவிடும். அந்த காட்சியை பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிப்பதிவு தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment