ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 24, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 24.3.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* 2023-2024ஆம் ஆண்டிற்கான மொத்த செலவீனமான ரூ.45 லட்சம் கோடி ஒன்றிய பட்ஜெட்டுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024ஆம் ஆண்டிற்கான, நிதி ஒதுக்கீடு மசோதாக்களை நிறைவேற்ற அனுமதி கோரினார். அப்போது விவாதம் எதுவுமின்றி, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிதி மசோதா நிறைவேறியது.

* ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

தி டெலிகிராப்:

* ரயில் விபத்தில் மக்கள் பலியானதற்கு பொறுப்பேற்று அன்று லால்பகதூர் சாஸ்திரி மனித நேயத்துடன் பதவி விலகினார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மனிதாபிமானம் என்னவெனில், குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்ததற்கு வருத்தப்படவோ, விவசாயிகளை வெட்டிய அமைச்சர் மகனுக்குக் கண்டனம்  தெரிவிக்கவோ இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment