புரோகிதனை அழைத்து விவாஹ சுபமுகூர்த் தத்தை நடத்தினால், அந்தப் பார்ப்பனன் சொல்லும் மந்திரம் என்ன, அதன் பொருள் என்ன?
"ஸோம: ப்ரதமோ விவதே கந்தர்வோ விவித
உத்தர: ! த்ருதீயோ அக்நிஷ்டே பதி: ! துரீயஸ்தே
மநுஷ்யஜா: !!"
"ஸோமன் முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னு டைய மூன்றாவது கணவன் அக்நி, உன்னுடைய நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்."
(விவாஹமந்த்ரார்த்த போதினி - தமிழாக்கம்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார், P.O.L. வெளியீடு லிப்கோ பப்ளிஷர்ஸ் (பி) லிட், பக். 27)
ஆரியப் புரோகிதனை அழைத்தால் நம் மகளை பல கடவுள்களுக்குப் பொண்டாட்டி என்று கூறச் செய்வதற்கா? சமஸ்கிருதத்தில் சொல்லுவ தால் நமக்குப் புரிவதில்லை, அதையே தமிழில் சொல்லியிருந்தால், பக்திப் பழமாக இருக்கும் நமது பாட்டியின் கையில் என்ன இருக்கும்?
சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அறிமுகப்படுத்தியதன் நோக்கம் புரிகிறதா?
No comments:
Post a Comment