புதுடில்லி, மார்ச் 11- மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், மரபையும் விதியையும் மீறி மாநிலங்களவையின் 20 நிலைக்குழுக்களுக்குத் தன் சொந்த ஊழியர்களை மிகவும் உயர்ந்த பதவியில் அமர்த்தியிருப்பது எதிர்க்கட்சியினரிடையே கோபாவேசத்தை ஏற் படுத்தி இருக்கிறது. 7.3.2023 அன்று மாநிலங்கள வைச் செயலகம் வெளியிட்டுள்ள ஆணையில் மாநிலங்க ளவைத் தலைவர் அலுவலகத்திலிருந்து நான்கு ஊழியர்களும், குடியரசுத் துணைத் தலைவரின் செயலகத்திலிருந்து நான்கு ஊழியர்களும் நிலைக்குழுக்களுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிலைக் குழுக்களுக்கு இவ்வாறு தனிப்பட்ட சொந்த ஊழியர்கள் இதற்கு முன்னெப்போதும் நியமனம் செய்யப்பட்டது கிடை யாது. ஒவ்வொரு நிலைக்குழுவுக்கும் அதன் செயல்பாட்டிற்கு உதவுவதற்காக கூடுதல் செய லாளர் அல்லது இணைச் செயலாளர் நிலையிலேயே இதுவரை நியமனம் செய்யப்பட்டிருக் கிறார்கள். மிகவும் இரகசியமாகச் செயல்பட வேண் டிய நிலைக்குழுக் கூட்டங்களில் இவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள். ஆனால் தற் போது மாநிலங்களவைத் தலைவரின் நியமனம் அத்து மீறலாக உள்ளது. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர் கள் மிகவும் கோபாவேசம் அடைந் திருக்கிறார்கள்.
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிலைக் குழுவின் தலைவராக வுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெயராம் ரமேஷ், இந்த ஆணை யானது “முன்னோடியில்லாதது மற்றும் விவரிக்க முடியாததுமாகும்” என்று கூறியிருக்கிறார். இவ்வாறு மாநிலங்களவைத் தலைவர் தன் விருப்பத்திற்கு ஆட்களை நியமனம் செய்தி ருப்பதில் எவ்விதமான விழுமியமும் மதிப்பும் இருப்பதாக தன்னால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். நிலைக்குழுக்கள் எவ் விதப் பிரச்சினையு மின்றி செயல்பட்டுக் கொண்டி ருக்கக்கூடிய நிலையில் இவ்வாறு கூடுதல் ஊழி யர்களை நியமிக்க வேண்டிய அவசியம் என்ன என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment