சென்னை, மார்ச் 24 திருச் சியில் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந் துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரத ராஜபெருமாள் உடனுறை சிறீதேவி, பூதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் வரதராஜபெருமாள், சிறீதேவி, பூதேவி, அனுமன் உலோக சிலைகள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு செந்துறை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் சிலையை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கு முடிக்கப்பட்டது. பின்னர் 2020-ஆம் ஆண்டு இந்த வழக்கு சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகத்தில் இணையதளத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு சிலைகளோடு, இந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட 4 சிலைகளை ஒப்பீடு செய்து பார்த்தனர். அப்போது திருடப்பட்ட 4 சிலைகளில் ஒன்றான அனுமன் சிலை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டு இருந்ததும், அங்கிருந்து ஏலம் விடப் பட்டதும் தெரியவந்தது.
மேலும், அந்த சிலை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சிலையும், கோவிலில் திருட்டு போன சிலையும் ஒன்று தான் என புகைப்பட ஆதாரத்தை வைத்து தொல்லியல்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்த சிலையை மீட்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மூலமாக உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தொடர் நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் அந்த சிலையை வைத்து இருந்த நபர், சிலையை ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி அவர், அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலமாக இந்திய தூதரகத்தில் ஒப் படைத்தார். பின்னர் அந்த சிலை பல்வேறு சோதனை களுக்கு பிறகு, இந்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக் கப்பட்டது. அந்த சிலை டில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவால் பெறப்பட்டு கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் மற்றும் அவரது குழுவை சேர்ந்த காவல் அதிகாரிகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு பாராட்டினார்.
இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
சென்னை மார்ச் 24 ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நேற்று (23.3.2023) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ஆளுநர் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப் பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார். மேலும்,ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா, அறிவால் மட்டுமல்ல; இதயத்தாலும் உருவாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா ஒருமனதாக நிறைவேறியது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (24.3.2023) ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டத்துறை மூலம் இன்று ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பல் மருத்துவ உயர் கல்வி ஆராய்ச்சி தர வரிசையில் சாதனை!
சென்னை, மார்ச். 24 துறை அடிப்படையிலான 2023-ஆம் ஆண்டுக்கான க்யு.எஸ். உலகத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் உலக அரங்கில் இந்திய உயர்கல்வித் துறையின் நிலையை உயர்த்தும் வகையில், இந்தியாவின் முன்னணி பல் மருத்துவக் கல்வி நிறுவனமாகிய சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் டாப் 13 இடங்களுக்குள் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் உலகளாவிய க்யு.எஸ். தரவரிசை வரலாற்றில், பல் மருத்துவத் துறையில் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் டாப் 15 இடங்களுக்குள், இந்தியாவில் இருந்து ஒரு பல் மருத்துவ நிறுவனம் இடம்பிடித்துள்ளது இதுவே முதல் முறை.
இது குறித்து கருத்து தெரிவித்த சவீதா பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரைய்யன்: பல் மருத்து வத்தில் உயர்தர கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நடை முறைகளை பின்பற்றுவது சார்ந்த எங்கள் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகத் திகழ்கிறது. ஆனால் இந்த உலக ளாவிய தரவரிசை ஒவ்வொரு இந்திய நிறுவனத்தையும் அதன் துறையில் சிறந்து விளங்குவதற்கு ஊக்குவிப்பதில் பெருமளவு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment