பொய் வீடியோ வெளியிட்ட ஆசாமி சரண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 19, 2023

பொய் வீடியோ வெளியிட்ட ஆசாமி சரண்

பாட்னா, மார்ச் 19-  தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக பொய் வீடியோ வெளியிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பீகார் காவல் துறையினரிடம் சரண் அடைந்தார்.

பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் பணி செய்து வருகின்றனர். பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள அவர் கள் தனியாகவும், குடும்பத்துடனும் வசித்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் மீது, குறிப்பாக பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டின் பல்வேறு பகு திகளில் தாக்குதல் நடப்பதாகவும், இதில் சிலர் கொல்லப்பட்டதாகவும் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது தொடர்பான பொய் வீடியோக்கள் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இது குறித்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினர். மேற்படி வீடியோக்களை ஆய்வு செய்து அவற்றை வெளியிட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே போலி வீடி யோக்களை தயாரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது. அந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாடு மற்றும் பீகார் மாநில காவல்துறையினர், அவர்களை கைது செய்யும் பணிகளை முடுக்கி விட்டனர்.

பீகார் மாநில காவல்துறையின் பொருளாதார குற்றங்கள் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்திருந்தனர். அமன்குமார், ராகேஷ் திவாரி, யுவராஜ் சிங் ராஜ்புத், மணிஷ் காஷ்யப் உள்ளிட்டோர் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருந்தன. இதில் அமன் குமார் கைது செய்யப்பட்டார். இதன் பின்ன ணியில் முக்கிய குற்றவாளியாக இருந்த மணிஷ் காஷ்யப்பை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாட்னா, மேற்கு சாம்பாரான் உள்ளிட்ட பகுதி களில் அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

\இதனால் காவல்துறையின ரின் கைது நடவடிக்கைக்கு பயந்து மணிஷ் காஷ்யப் மேற்கு சாம்பா ரான் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜக்திஷ்பூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், போலி வீடி யோக்களை தயாரித்தவர் மணிஷ் காஷ்யப் என கூறப்படுகிறது. இவர் யூடியூப் வலைத்தளம் ஒன்றையும் நடத்தி வருகிறார். முன்னதாக இவருக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை போலீசார் முடக்கியிருந்தனர்.

தமிழ்நாட்டில் வட மாநில தொழி லாளர்கள் தாக்கப்படுவதாக 30-க்கும் மேற்பட்ட போலி வீடியோக் களை இந்த கும்பல் தயாரித்து இருந்ததாக பீகார் காவல்துறையினர் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி சரண் அடைந்திருப்பது காவல்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.

  மனீஷ் கஷ்யப் என்ற இந்த நபர் அன்றாடம் கைப்பேசியில் ஏதா வது படம் எடுத்து யூடியூப் உள் ளிட்ட வளைதளத்தில் பதிவிட்டு வருபவர், இவரது பிழைப்பே  கடைக்காரர்களிடம் சுகாதார மில்லாத உணவு கொடுக்கிறாய் என்று படம் எடுத்து  மிரட்டி அவர்கள் கொடுக்கும் பணத்தில் தான் ஓடுகிறது. 

 அதாவது 8ஆவது வகுப்பு கூட தாண்டாத நபர் - வங்கிக் கணக்கில் சில மாதம் வரை சில 100 ருபாய் கூட இல்லாத ஒரு நபரின் வங்கிக் கணக்கில் திடீரென ரூ 42 லட்சம் எப்படி வந்தது. பொய் வீடியோ தயாரிக்கவே இந்தப்பணம் கொடுக் கப்பட்டது என்பது உறுதியாகிறது. தமிழ்நாடு காவல்துறையினர் இந்த நபரைக் கைதுசெய்து தமிழ் நாடு கொண்டுவந்து தீவிர விசா ரணை செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment