சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 2, 2023

சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தேஜஸ்வி உரை

சென்னை, மார்ச் 2- வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் தமிழ்நாட் டிடம் இருந்து சமூகநீதியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்து ளார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

"தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், பீகார் முதல மைச்சர் நிதிஷ்குமாருக்கும் இன்று தான் பிறந்தநாள். என் சார்பாகவும், எனது தந்தை லாலு பிரசாத் சார் பாகவும் ஸ்டாலினுக்கு பிறந்தாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக சமத்துவத்திற்கு முக்கியத் துவம் அளிக்கும் இயக்கத்திலிருந்து நாம் வந்துள்ளோம். தமிழ்நாட்டில் தி.மு.க. பொருளாதார, வேலை வாய்ப்பை உருவாக்க முக்கியத்து வம் அளிப்பது போலப் பீகாரில் நாங்களும் அதை முன்னெடுத்துச் செல்கிறோம். நமது நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத எமர் ஜென்சி நடைபெற்று வருகிறது. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

பாஜக ஆட்சியில் நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. வலுவான ஒரு மாற்றுச் சக்தியை உருவாக்க முதலமைச்சர் ஸ்டா லினை இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. கடுமையான உழைப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்து, சமூகநீதியின் மேன்மை களைப் பாதுகாக்கும் வகையிலான ஆட்சியை பெரியார், அண்ணா, கலைஞர் வரிசையில் ஸ்டாலின் நடத்திவருகிறார். பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படு கிறது.

சமூக நீதியைப் போதிக்கும் தமிழ்நாட்டைப் பார்த்து மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். சோசலிசம் மற்றும் சமூக நீதிக் கொள்கைகளைக் கொண்ட கட்சி கள் சந்திக்கும் தளமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது. இங்கு பின்பற்றப் படும் சமூகநீதிக் கொள்கைகளை வட இந்தியாவில் இருக்கும் கட்சி கள் கற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment