அன்னை மணியம்மையார் பிறந்தநாள் காணொலி திரையிடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

அன்னை மணியம்மையார் பிறந்தநாள் காணொலி திரையிடல்

வெங்கடசமுத்திரம், மார்ச் 20- அரூர் கழக மாவட்டம்  வெங்கட்டசமுத்திரம் கிராமத்தில் திராவிடர் கழக கலைத்துறை சார்பில் நான் காவது கிராமமாக அன்னை மணியம்மையாரின் ‘அரசியல் அரசியர்’ காணொலி திரையிடப்பட்டது. 

மாணவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு காணொலியை பார்த்து மகிழ்ந்தனர். ‘அரசியல் அரசியர்’ காணொலி யில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் திராவிடர் இயக்க வரலாற்றுப் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் ஆகியோர் காணொலி யில் அன்னை மணியம்மையாரின் தொண் டினைப் பற்றி விளக்கி உள்ளனர்.

17.03.2023 இல் நமது பகுத்தறிவுப் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்  மறைவுற்றதை தெரிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் அன்னை மணியம்மையாரின் தியாகத் தொண்டினை “பெரியாருக்குப் பின் அன்னை மணியம்மையார்” என்ற தலைப் பில்  கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி பொதுமக்களிடத்தில் விளக் கினார். 

திராவிட மாணவர் கழக தோழர்கள் சாய்குமார்,  தென்றல்பிரியன், சத்யா பிரியன், நாச்சியப்பன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

மண்டல மாணவர் கழக செயலாளர் இ.சமரசம், தோழர் பெரியார், அரூர் கழக இளைஞரணித் தலைவர் த.மு.யாழ் திலீபன் ஆகியோர் இக்காணொலியைத் திரை யிட்டனர்.


No comments:

Post a Comment