ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 13.3.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பட்ஜெட் தொடரின் 2ஆவது அமர்வு; நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஆன்லைன் ரம்மிக்கு தடை குறித்து விவாதிக்க திமுக தாக்கீது.

தி டெலிகிராப்:

* சிபிஅய் மற்றும் அமலாக்க இயக்குநரகம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதலுக்கு, 2024 பொதுத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் நோக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். அதற்கு அதன் எதிரிகளை "மதிப்பிழக்கச் செய்து ஒற்றுமைப்படுத்த" வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் நம்புகின்றன. 

* நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கும் நேரத்தில்  எதிர்க்கட்சிகளுக்கும்  நரேந்திர மோடி அரசுக்கும் இடையே கசப்பு அதிகரித்து, இரு அவைகளின் தலைவர்களுடன் நம்பிக்கை பற்றாக்குறை வடிவத்தில் புதிய நெருக்கடி வெடித்துள்ளது.

* தாய் வயிற்றில் கரு உருவானபின், புராண கதை களை கூறுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் மனதில் ஹிந்து உணர்வை ஊட்ட வேண்டும் (கர்ப்ப சன்ஸ்கார்) என்ற ஆர்.எஸ்.எஸ். முயற்சி பல்கலைக்கழகத்தில் மருத்து வர்கள் முன்னிலையில் நடைபெறுவது பிரச்சினைக்குரியது என்கிறது தலையங்க செய்தி.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment