ஹோலி பண்டிகையா? பெண்களை சீண்டும் ஆபாசப் பண்டிகையா? பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் குமுறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 13, 2023

ஹோலி பண்டிகையா? பெண்களை சீண்டும் ஆபாசப் பண்டிகையா? பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் குமுறல்

இதுதான் ஹிந்து கலாச்சாரம் - ஆளுநர் மொழியில் சனாதன சன்ஸ்கார் (கலாச்சாரம்)

பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்ட ஜப்பானியப் பெண் (டில்லி)

கணவரோடு வந்த வெளிநாட்டுப் பயணியை மோசமான நடத்தையால் வன்கொடுமை செய்த இளைஞர்கள் (வாரணாசி)

புதுடில்லி, மார்ச் 13 வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகை யில் சமீபகாலமாக பாலியல் வன்கொடு மைகளும், சீண்டல்களும் அதிகரித்து உள்ளன.

வட மாநிலங்களில்  ஹோலி என்கிற பெயரால் ஒருவர் மீது ஒருவர்   வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டாடுவர். வட மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித் தாலும், ஹோலிக்கு அவரவர் ஊருக்குச் சென்று   கொண்டாடுவார்கள். முடியாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில்  கொண் டாடுவார்கள். வடமாநில அரசியல் தலை வர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பர்.

 ஆனால் இதெல்லாம் ஒரு புறம் இருக்க, ஹோலியின் போது வண்ணப் பொடிகளைப் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களும் நடைபெற்று வரு கின்றன. சமீப காலமாக சில நிறுவனங்கள்  சமூக அக்கறை கொண்ட விளம்பரங்களைக் கொண்டு தங்கள் பொருட்களையோ, சேவையையோ விளம்பரம் செய்து வரு கின்றன. 

அந்த வகையில் இந்த ஆண்டு ஹோலிக்கு தனியார் இணையதளம் ஒன்று விளம் பரத்தை வெளியிட்டிருந்தது. அதில், ஹோலி கொண்டாட்டம் எனும் பெயரில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன் கொடுமைகளைக் காட்சிப்படுத்தி ‘சில வண்ணங்களை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது’ என்றும் இதனால் பெண்கள் ஹோலியைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்திருந்தது. அதே சமயம், இந்த ஆண்டு அப்படியில்லாமல் அனைவரும் இணைந்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தது. இந்த விளம்பரத்திற்கு அடிப்படைவாதிகளிடம் கடும் கண்ட னங்கள் எழுந்தன. மேலும், அந்த இணைய தளத்தை புறக்கணிக்கவும் சமூக வலைத் தளங்களில் அடிப்படைவாதிகளால் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஜப்பான் பெண் கதறல்

அந்த வைரல் காட்சிப் பதிவுகளில் ஒன்றில், டில்லியில் ஜப்பான்  நாட்டிலிருந்து சுற்றுலாவந்த  இளம்பெண்ணிற்கு பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து  பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். ஒருகட்டத்தில் இளைஞர்கள் கூடி நின்று அந்த பெண்னின் தலையில் முட்டையை உடைக்கின்றனர். மேலும் பெயிண்டை எடுத்து ஊற்றுகின் றனர்.  மேலும் சிலர் அந்த பெண்ணின் ஆடைக் குள் கைவிட்டு மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றாலும் தொடர்ந்து அந்த இளைஞர்கள் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பது பதிவாகி யுள்ளது.

இதேபோன்று மற்றொரு காட்சிப் பதிவில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் _ பெண் இருவர் சாலையில் நடந்து செல்லும் போது ஹோலியைக் கொண் டாடிய ஆண்கள் அந்த வெளிநாட்டுப் பெண்ணின் உடலை அனுமதியின்றி தொட்டு வண்ணப் பொடிகளைப் பூசுகின்றனர். மேலும், அந்தப் பெண்ணிற்கு வண்ணப் பொடிகள் பூசி, ஒவ்வொரு இளைஞராக கட்டிப் பிடித்து அத்துமீறிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அந்த பெண்ணுடன் வந்த ஆண்  காட்சிப் பதிவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். 

 அதே போன்று இஸ்லாமிய பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் போது அவர் மீதும் சிறுவர்கள் உள்பட இளை ஞர்கள் சிலர் வண்ணப்பொடியை வீசியெறியும் காட்சிப் பதிவும் வைரலாகி வரு கிறது. இதே போன்று   ஹோலியின் போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் பல காட்சிப் பதிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன. டில்லியில் பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் விவகாரத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள் ளனர்.

 இந்த நிலையில் வங்கதேச தலைநகர்  டாக்காவிற்குச் சென்ற ஜப்பானிய இளம் பெண் கண்ணீருடன் ஒரு சமூகவலைதளப் பதிவை வெளியிட்டுள்ளார். "நான் பாது காப்பாக வந்து சேர்ந்தேன். இந்தியாவில் எனக்கு ஏற்பட்ட அந்த மோசமான நிகழ்வுகளை நான் எப்படி மறப்பேன் என்று தெரியவில்லை. இனி இந்தியா என்றாலே  கொடூரமான மோசமான பாலியல் சீண்டல்கள்தான் என் முன்வந்து செல்லும்" என்று கூறியுள்ளார். 

 அதே போல் தனது கணவருடன் வந்த வெளிநாட்டுப்பெண் ஒருவர் கூறும் போது, "எனது கணவன் முன்பே என்னிடம் பாலி யல் சீண்டல்களில் ஈடுபட்டனர். நாங்கள் ஒன்றும் செய்வதறியாமல் திகைத்திருந்தோம்" என்று கூறினார்.

மேலும், "ஹேப்பி ஹோலி என்ற பெயரில் கிட்டத்தட்ட துன்புறுத்துகிறார்கள்  -_ அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் குழம்பிப் போய் செயற்கையாக சிரித்தோம். - காரணம் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நடக்கும் என்று பலமுறை வடமாநிலங்களில் நடந்த நிகழ்வுகள் எங்கள் கண் முன்வந்து சென்று கொண்டிருந்தன. இது எங்கள் வாழ்நாளில் மிகவும் மோசமான நிகழ்வு ஆகும். நாங்கள் கனவில் கண்ட இந்தியா இது இல்லை. இருப்பினும் எங்களுக்கு ஒன்றும் சொல்ல வார்த்தை இல்லை. 

 நாங்கள்மறந்துவிட நினைக்கிறோம். ஆனாலும் இனி மேல் இந்தியா வரும் எண் ணம் வரவாய்ப்பில்லை" என்று வருத்தத் தோடு தெரிவித்தார்.

புராணங்களின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்ற இந்த  'ஹோலி' யால் பன்னாட்டளவில் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment