பாசிச பா.ஜ.க.வை வீழ்த்திட எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் முயற்சியில் மு.க. ஸ்டாலின் ஈடுபட வேண்டும்
சென்னை, மார்ச் 2- பா.ஜ.க. அரசை வீழ்த்த - எதிர்கட்சித் தலைவர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் (1.3.2023) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்த வந்துள்ள உங்கள் அனைவருக் கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 81 வயது ஆகிறது. எனவே 70 வயது நிரம்பியுள்ள இளை யவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.
அவருக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிக நீண்ட நாட்கள் நல்ல உடல்வலிமையுடன் வாழ்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று இந்தத் தருணத்தில் வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து அவர் சேவையாற்ற வேண்டும் என்கிற என அவாவையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல தந்தையாருக்குப் பிறந்த நல்ல புதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர் அவரது தந்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆவார்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கோட்பாடுகளின் வழியில் செயல்பட்டுவருபவர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களாகும். அவர் நமது காலத்தில் நவீன தமிழ் நாட்டை உருவாக்குவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாடு எப்போதுமே ஒரு வளர்ச்சி அடைந்து வரும் மாநிலமாகும். தமிழ்நாட்டிற்கு சிறந்த அரசியல் பாரம்பர்யம் உள்ளது. சிறந்த தலைவர்களை இம்மாநிலம் உருவாக்கி உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த அதிகாரிகளை, அறிவாளிகளை, சமூக வளர்ச்சிக்கான எழுத்தாளர்களை யும் அது உருவாக்கி உள்ளது.
தமிழ்நாட்டு வரலாற்றில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலை வர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
சமூகநீதியை கட்டமைக்க தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்து வருகிறது. இலவச கல்வியை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியும் வருகிறது. நல்லதொரு முற்போக்குச் சமுதாயம் கொண்டுள்ள தமிழ்நாடு தொழில் வளத்துடன் சிறந்து விளங்கி ஏழைகளுக்கு உதவும் வகையில் திகழ்கிறது. சமூக நீதிக்கும் - சமூக வளர்ச் சிக்கும் தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்து தொலைநோக்குப் பார்வையுடன் செயல் பட்டு வருகிறது.
பகுத்தறிவு சிந்தனையாளர்கள்
பிரதமர் நேரு அவர்கள் அறிவுரீதி யான -பகுத்தறிவு சிந்தனையுடன் எதை யும் அணுகுவார். அதேவழியில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் இருந்து வந்தனர். அதையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து எண்ணி பின்பற்றி வருகிறார். வெறும் பேச்சோடு இல்லாமல், அதை உணர்வுப் பூர்வமாகவும், கொள்கையாகவும் எண்ணி செயல்பட்டும் வருகிறார்.
சமத்துவம், சமதர்மம், சுதந்திரம் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு அரசமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் ஏற்படுத்தி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். தி.மு.க. வின் கொள்கைகளும், அதனடிப்படை யிலேயே உள்ளன.
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டன. வரும் 2024 ஆம் ஆண்டும் தி.மு.க.- காங்கிரஸ் இணைந்த மதசச்சார்பற்ற கூட்டணியாக நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடும் என் பதை இந்த பிறந்த நாள் விழாவில் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரசைப் பொறுத்தவரை தமிழ் நாட்டில் மிக முக்கிய இடத்தை பெற் றுள்ளது. ராகுல்காந்தி அவர்கள் தமது இந்திய ஒற்றுமைப் பயணத்தை தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரியில்தான் தொடங்கினார். அதை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் துவக்கி வைத்தார். அந்த ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணம் வெற்றி பெற்றது அனைவரும் அறிவர். 2009 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ராகுல்காந்தியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். எங்களுக் குள்ள தோழமையை மேலும் வளப்படுத்தி மக்களுக்காக உழைப்போம்!
இன்றைக்கு நாடு மிகவும் கடினமான பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக் கிறது. பி.ஜே.பி. அரசின் செயல்களால் இன்றைக்கு நாட்டில் 23 கோடிக்கும் மேலானவர்கள் வறுமைநிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். பணவீக்கத்தால் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மையால் இளைஞர்கள் அவதிப்படுகிறார்கள். எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக நாட்டையே வெவ்வேறு பாதைக்கு கொண்டு சென்று வெவ்வேறு கருத்துகளை திணித்துக்கொண்டு பா.ஜ.க. அரசு செல்கிறது.
கொள்கை ரீதியானது தமிழ்நாடு
ஆனால், இதற்கெல்லாம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இடம் தராது. தமிழ்நாடு கொள்கைரீதியிலானது என்று அனைவரும் அறிவர். பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் எவ்வாறு நடந்து கொள் கிறார்கள் என்பதை அறிவோம். பா.ஜ.க. அரசு நீதித்துறையையும் தேர்தல் ஆணையத்தையும் இன்னுமுள்ள முக்கிய அதிகார அமைப்புகளையும் தன்வசம் எடுத்துக்கொள்ள முயல்கிறது. அரசியல் சட்டத்தையும் வெளிப்படை யாகவே பா.ஜ.க. தலைவர்கள் மாற்றி அமைத்து வருகின்றனர். அதுவே அவர்களின் குறிக்கோளாகவும் உள்ளது. நாட்டை அப்படிப்பட்டவர்களிடம் இருந்து மீட்கவும், அரசியல் சட்டத்தைக் காப்பாற்றவும் நாம் அனைவரும் ஒன்றி ணைவது அவசியம். இதற்கான போராட் டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிப்பார் என்று நான் திடமாக நம்பு கிறேன். தலித் மக்களும் பிற்படுத்தப்பட்ட வர்களும் ஒன்றிய அரசால் மிகவும் பாதிப் பிற்குள்ளாகி போராட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கு மாபெரும் வரலாறு உள்ளது. மிகப் பெரும் எதிர்காலமும் உள்ளது. தி.மு.க.வும் காங்கிரசும் ஒன்றாக இருந்து தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும். ஒத்துக் கருத்துடைய எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரண்டு, எதிர்ப்புச் சக்திகளை முறிய டித்தாக வேண்டும். அதுதான் நம்முடைய விருப்பமுமாகும். இதற்கு யார் முன் நிற்பது? யார் பிரதமராவது? யார் இவைகளை முன்னின்று நடத்துவது? என்பதெல்லாம் இப்போது கேள்வியல்ல. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து - அதற்காக தியாகம் செய்து போராட வேண்டியது மிகமிகக் கட்டாயமாகும். மதச்சார்பற்ற என்ற பெயரால், சுதந்திரம் என்ற பெயரால் பேச்சுரிமை என்ற பெயரால் நாம் அதைச் செய்தாக வேண்டும். தீயவைகளை எதிர்த்து நாம் போராடவேண்டும் என்பதே இப் போதைக்கு மிக மிக முக்கியம்.
மு.க. ஸ்டாலின் பல்லாண்டு வாழ்க
நான் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கும்- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள் கிறேன். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையொட்டி மக்களுக்கு உதவும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதை நான் பார்க்கிறேன். அவர் மென்மேலும் பல்லாண்டுகள் நல்ல உடல்நலத்துடன் 100ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நமக் குள்ளே ஒரு ஒற்றுமையை மு.க.ஸ்டாலின் நிச்சயம் உருவாக்குவார் என்று நான் நம்புகின்றேன். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிலைப்பாடுகள் இருந்தாலும் பிரித்தாளும் சக்திகளை எதிர்க்க நாம் ஒன்றிணைவது அவசியம் என்று நம்பு வோம். இந்த பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு என்னை அழைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களி டம் மீண்டும் நன்றி கூறி விடை பெறு கிறேன். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார்.
No comments:
Post a Comment