புதுச்சேரி, மார்ச் 14- புதுச்சேரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்சில் முழு நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:
''புதுச்சேரியில் 2023_-2024ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடு ரூ. 11,600 கோடி என நிர்ணியிக்கப் பட்டுள்ளது.
சொந்த வருவாய் வரவினங்கள் ரூ.6154 கோடியாகவும், ஒன்றிய அரசு நிதியுதவி ரூ. 3177 கோடியாகவும், ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் தரப்படும் நிதி ரூ.620 கோடியாகவும் உள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுசெய்ய ஒன்றிய அரசு அனுமதியுடன் வெளிச் சந்தை கடன் ரூ.1707 கோடியாகும். நடப் பாண்டில் மகளிருக்கு சிறப்பு நிதியத் துக்கு ரூ. 1332 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்கு ரூ. 555 கோடியும், இளையோ ருக்கான சிறப்பு நிதியத்துக்கு ரூ 504 கோடியும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நிதியங்களுக்கு ரூ. 2391 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் நிதி ஒதுக் கீட்டில் பெரும்பகுதி ஊதியம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டியைச் செலுத்துதல் ஆகிய செலவினங்களுக்காகச் செலவிடப் படுகிறது.
நிதிநிலை அறிக் கையில் ஊதியத்துக்கு 21.92 சதவீதமும் (ரூ.2542 கோடி), ஓய்வூதியங்களுக்கு ரூ. 12.53 சதவீதமும் (ரூ.1455 கோடி), கடன், வட்டிக்கு 15.95 சதவீதமும் (ரூ. 1850 கோடி), மின்சாரம் வாங்க 14.57 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம் மற்றும் நலத் திட்டங்களுக்கு 16 சதவீதமும் (ரூ1856 கோடி), தன்னாட்சி உயர் கல்வி நிறுவனங்களுக்கு 3 சதவீதமும் (ரூ. 350 கோடியும்), கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியக் கொடையாக 9.39 சதவீதமும் (ரூ. 1089 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் மாநாடு நடத்தத் திட்டம்
சிறுதானிய பயறு வகைகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ. 5 ஆயிரம் தரப்படும். அத்துடன் இடு பொருள் மானியமாக ரூ. 7 ஆயிரம் தரப்படும். இயற்கை முறையில் நெல் ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8 ஆயிரம் உற்பத்தி மானியம் தர உத்தேசித் துள்ளோம். 600 ஹெக்டேர் பரப்பு விளை நிலங்களை இயற்கை வேளாண்மை சாகுபடியில் கொண்டு வர உள்ளோம். நடப்பாண்டு வேளாண் துறைக்கு ரூ. 159.36 கோடி ஒதுக்கி யுள்ளோம்.பால் உற்பத்தியைப் பெருக்க உயர் ரக கலப்பின கறவை பசு 50 விழுக்காடு மானியத்தில் தரப்படும். ஒரு கறவை பசு வைத்திருப்போருக்கு 50 விழுக்காடு மானியத்தில் இரண்டு கலப்பின கறவைப்பசுக்கள் தரப்படும். 3 கறவைப்பசு வைத்திருந்தால் மேலும் 2 பசுக்கள் 40 சத மானியத்தில் தரப்படும். நவீன பால் கறவை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக தரப் படும். பாரதியார் நினைவு அருங்காட் சியகம், பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம், மகாகவி பாரதியார் நினைவு மண்டபம், கீழூர் நினைவுச்சின்னம், மக்கள் தலைவர் சுப்பையா நினைவகம் ஆகியவற்றில் சீரமைப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் துவங்கப்படும். புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.
6 முதல் 12 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம்
பள்ளி மாணவர்களின் ஊட்டச் சத்தினை மேம்படுத்தும் பொருட்டு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி தரப்படும். கல்வித் தரத்தை மேம்படுத்த ஆறு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். விரைவில் இலவச மடிக் கணினி தரப்படும். தெரு விளக்குகள் அனைத்தும் எல்இடி விளக்குகளாக ரூ. 4.5 கோடியில் மாற்றப்படும். தீயணைப்புத் துறைக்கு 54 மீட்டர் உயரம் செல்லும் அதிநவீன ஸ்கை லிப்ட் வாங்கப்படும். புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோயில் சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர அசையும் சொத்துகள் உட்பட அனைத்து ஆவணங்களும் டிஜிட்ட லாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு இணை யத்தில் பதிவேற்றப்படும். அசையா சொத்து கள் விவரம் சேகரிக்கப்பட்டு கோயில் நிலம், வீடு, வணிக வளாகம் ஆகியவற்றில் பெறப் படும் வாடகை உயர்த்தப்படும்'' இவ்வாறு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment