மும்பையில் " சுயமரியாதைச் சுடரொளிகள்" நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 20, 2023

மும்பையில் " சுயமரியாதைச் சுடரொளிகள்" நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது!

மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளி கையில் 16.03.2023 மாலை 7.00 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.

மும்பை திராவிடர் கழகத்தின் செயலாளர் இ.அந்தோனி வரவேற் புரையாற்ற அன்னை மணியம் மையார் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய  பின் அதைத் தொடர்ந்து மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் தலை வர் அ.இரவிச்சந்திரன்  தொடக்க உரை நிகழ்த்தி அம்மாவின் தியாக வாழ்வை நினைவு கூர்ந்து பேசி னார்.  

அதைத் தொடர்ந்து மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் .இந்த நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள் சோ. ஆசைத்தம்பி, அய்.செல்வராஜ், பெரியார் பாலாஜி, முலூண்ட் ஆ.பாலசுப் பிரமணியம் மும்பை திமுக மூத்த தலைவர் என்.வி. சண்முகராசன் கழக ஆதரவாளர் சிவ நல்ல சேக ரன் தென்னிந்திய ஆதிதிராவிட மாகாண சங்க மேனாள் தலைவர் கே.வி. அசோக்குமார், பனங்குடி சண்முகவேல், மும்பை மாநகர திமுக அவைத் தலைவர் வே.ம. உத் தமன், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பாந்திரா க.மு .மாணிக் கம்  ம.நீதித்துரை அன்பழகன் பொற்கோ, மாறன்ஆரிய சங்காரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து லால்குடி மாவட்ட திராவிடர் கழகத்துணைச் செயலா ளர் வெ. சித்தார்த்தன்,  மகிழ்ச்சி மகளிர் பேரவை நிர்வாகி சுமதி மதியழகன், தமிழ் லெமூரியா அறக்கட்டளையின் தலைவர் சு.குமணராசன், புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் உரைக்குப்பின் நினைவு சிறப்புரையாற்றினர்.

மும்பை டாட்டா உயர்கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் பட்ட மேற்படிப்பு மேற் கொண்டிருக்கும் தோழர் கயல்விழி அன்னை மணியம்மையார் தியாக வாழ்வை தெளிவாக வரலாற்றுக் குறிப்புகளுடன் நீண்ட உரையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் தோழர்கள் பொய்சர் க.மூர்த்தி இரா .ராஜேந் திரன் தே. ஸ்டீபன் ஜெயராஜ், எஸ். பாஸ்கர் கே.வி. சிவபெருமாள் க. அறிவுமதி எம்.அலி முகமது சா நெல்லை ராசன் , த.நெல்லை குமார் , , மும்பை திராவிடர் கழகத் துணைச் செயலாளர் ஜெ.வில்சன் பெரியார் பிஞ்சு க.அறிவு மலர் மகிழ்ச்சி மகளிர் பேரவை தோழயர் கள் வனிதா இளங்கோவன், க.வளர்மதி . சி.சோலைமுத்து, உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் மும்பை திரா விடர்கழக பொருளாளர் அ. கண் ணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment